தேவையான பொருட்கள் :
மிளகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
புளி – சிறு எலுமிச்சம் பழம் அளவு
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – 1 தேக்கரண்டி
பெருங்காய பொடி – 1/2 தேக்கரண்டி
செய்முறை:
* புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
* துவரம் பருப்பு, மிளகு, சீரகத்தை பத்து நிமிடம் நீரில் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* பாத்திரத்தில் புளியை கரைத்து கொதிக்க வைக்கவேண்டும்.
* நன்கு கொதிக்கும்போது, அரைத்து வைத்துள்ள கலவையை அதில் கொட்டவேண்டும். உப்பும் சேர்த்து, சிறு தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு நெய்யில் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து, சேர்க்கவும்.
* உடல்வலி, மூட்டு வலி, ஜீரணக்கோளாறு, சளி, இருமல் தொந்தரவு இருக்கும்போது சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தொண்டை வலி, சளி, இருமல் இருக்கும்போது சூப் போன்றும் பருகலாம். புழுங்கல் அரிசி கஞ்சியில் இந்த ரசத்தை கலந்து பருகினால் தொண்டைக்கு இதமாக இருக்கும்