25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
27 1467011928 1 facialhair
முகப் பராமரிப்பு

ஷேவிங் செய்யாமல் முகம், கை, கால்களில் உள்ள ரோமத்தை நீக்குவது எப்படி?

தேகத்தில் வளரும் முடி நல்ல பாதுகாப்பை வழங்கினாலும், அது ஒருவரின் பட்டுப் போன்ற சருமத்திற்கு இடையூறை உண்டாக்குகிறது. ஆண்களுக்கு சருமத்தில் முடி இருந்தால் தான், அது அவர்களுக்கு நல்ல தோற்றத்தை வழங்கும். ஆனால் பெண்களுக்கு அப்படி சருமத்தில் ரோமங்கள் அதிகம் இருந்தால், அது அவர்களது அழகிற்கு கேடு விளைவிக்கும்.

அதிலும் சில பெண்களுக்கு முகத்தில், கை, கால்களில் முடி அதிகம் இருக்கும். இப்படி சருமத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்க பலர் ஷேவிங், வேக்சிங் போன்றவற்றை மேற்கொள்வார்கள். ஆனால் சில பெண்கள் இயற்கை வழிகளில் முடியை நீக்க தேடுவார்கள். நீங்களும் அப்படி இயற்கை வழிகளைத் தேடுபவராயின், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு எந்த ஒரு பக்க விளைவுமின்றி சருமத்தில் வளரும் முடியைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முகத்தில் வளரும் முடியைப் போக்க… சில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். சில பெண்களுக்கு உதட்டிற்கு மேலே முடி அதிகம் வளரும். இதனைப் போக்க எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கலவை முகத்தில் மட்டுமின்றி, உடலின் மற்ற பகுதிகளில் வளரும் முறையைப் போக்கவும் உதவும். ஆனால் இந்த கலவையை மிகவும் சென்சிடிவ்வான பகுதிகளில் பயன்படுத்தக்கூடாது.

தேவையான பொருட்கள்: சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 1/ டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

செய்யும் முறை: முதலில் ஒரு பௌலில் சர்க்கரை மற்றும் தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முடி வளரும் இடத்தில், முடி வளரும் திசையை நோக்கி தடவி, 15-20 நிமிடம் கழித்து, தண்ணீர் கொண்டு மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், முடியின் வளர்ச்சி குறைவதைக் காணலாம்.

கை, கால்களில் வளரும் முடியைப் போக்க… உடலில் வளரும் தேவையற்ற முடியை நீக்க எலுமிச்சை, சர்க்கரை மற்றும் தேன் கலவை சிறந்ததாக இருக்கும். இந்த முறை ஒரு வேக் போன்று செயல்படும் மற்றும் இந்த முறையால் சிறிது வலியை உணர நேரிட்டாலும், எந்த ஒரு பக்கவிளைவும் இருக்காது.

தேவையான பொருட்கள்: சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் மைதா/சோள மாவு – 1-2 டீஸ்பூன் வேக்சிங் ஸ்ரிப் அல்லது ஒரு துண்டு துணி ஸ்படுலா அல்லது கத்தி

செய்முறை: ஒரு பௌலில் சர்க்கரை, எலுமிச்சை, தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 3 நிமிடம் சூடேற்ற வேண்டும். கலவையானது கெட்டியாக இருந்தால், சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, அறைவெப்ப நிலையில் குளிர வைக்க வேண்டும். பின் மைதாவை முடி உள்ள இடத்தின் மேல் தடவிக் கொள்ளவும். பின்பு கத்தியால் கலவையை எடுத்து, முடி உள்ள இடத்தில், அது வளரும் திசையை நோக்கி தடவி, பின் வேக்சிங் ஸ்ரிப் அல்லது துணியை அவ்விடத்தில் வைத்து, முடி வளரும் எதிர் திசையை நோக்கி இழுக்க வேண்டும். இப்படி முற்றிலும் முடி நீங்கும் வரை செய்யுங்கள்.

முட்டை மாஸ்க் தேவையான பொருட்கள்: சோள மாவு – 1/2 டேபிள் ஸ்பூன் முட்டை – 1 சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முதலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சோள மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 20-25 நிமிடம் உலர வைக்கவும். கலவையானது முற்றிலும் உலர்ந்ததும், அதனை முடி வளர்வதற்கு எதிர் திசையில் கையால் உரித்து எடுக்கவும். இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்கலாம்.27 1467011928 1 facialhair

Related posts

பெண்களே முகத்துல பிம்பிள் அதிகமா வருதா? அப்ப இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

முகத்திற்கு பேஸ்பேக்

nathan

முகத்தில் மங்குவா? இனி வெளியே செல்ல கூச்சம் வேண்டாம். இதை ட்ரை பண்ணுங்க

nathan

உங்களுக்கு கருவளையம் சங்கடப்படத்துகிறதா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அழகைப் பாழாக்கும் கருவளையங்கள் வராமல் இருக்க சில வழிகள்!!!

nathan

சாருமத்தை அழகு படுத்த ஒரு சிறந்த இயற்கையான முறை!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களை கவர்ந்து இழுக்கும் அழகை பெற இவற்றை செய்தாலே போதும்..

nathan

இந்த பருவ காலத்தில் சில எளிய வீட்டு பராமரிப்பு முறை

sangika

உங்க முகத்துக்கு மஞ்சள் தடவும்போது நீங்க செய்யும் இந்த தவறு பல பாதிப்புகளை ஏற்படுத்துமாம் ?தெரிஞ்சிக்கங்க…

nathan