24.4 C
Chennai
Sunday, Jan 12, 2025
201610221432097486 moong dal laddu SECVPF
சிற்றுண்டி வகைகள்

செட்டிநாடு பாசிப்பருப்பு நெய் உருண்டை

பாசிபருப்பு நெய் உருண்டையானது சத்துமிக்கது. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த பாசிப்பருப்பு நெய் உருண்டையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

செட்டிநாடு பாசிப்பருப்பு நெய் உருண்டை
தேவையான பொருட்கள் :

பாசிப் பருப்பு – 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் 200 கிராம்
ஏலக்காய் – 6
முந்திரி உடைத்தது – 50 கிராம்

செய்முறை :

* ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.

* முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.

* பாசிப் பருப்பை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்சியில் அரைக்கவும்.

* அரைத்த மாவை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.

* மிக்சியில் சர்க்கரையை போட்டு அரைத்து அதையும் மாவில் கலக்கவும்.

* ஒரு தட்டில் அரைத்த மாவு, சர்க்கரை, ஏலக்காய் துள், வறுத்த முந்திரி அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

* வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெதுவெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆற விடவும்.

* ஆறியதும் டப்பாவில் போட்டு மூடிவைத்து சாப்பிடும் போது எடுத்துக்கொள்ளலாம். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

* சுவையான சத்தான இனிப்பு இது.

* செட்டிநாட்டுப் பக்கம் மிகவும் பிரபலமானது. திருவிழாக்காலங்களில் இதனை செய்து விருந்தினர்களை உபசரிப்பது வழக்கம்.201610221432097486 moong dal laddu SECVPF

Related posts

மசாலா பூரி செய்வது எப்படி?

nathan

சிவப்பு அரிசி கொழுக்கட்டை

nathan

வெஜிடேபிள் அவல் கட்லெட்

nathan

பனீர் சாத்தே

nathan

குழந்தைகளுக்கான கேரட் – சீஸ் ஊத்தப்பம்

nathan

சுவையான சத்தான கீரை கட்லெட்

nathan

ஸ்டஃப்டு சாதம் பராத்தா

nathan

ஓட்ஸ் தேங்காய் தோசை

nathan

செட் தோசை

nathan