25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
11 25 1466842853
முகப் பராமரிப்பு

மின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ் வீட்டிலேயே தயாரியுங்கள்!

தேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது அறிந்ததே. சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ஒருமித்த குரலில் சொல்லியிருக்கிறார்கள்.

அத்தகைய தேங்காய் எண்ணெயை நாம் காலங்காலமாக பயன்படுத்திவருகிறோம். முக்கியமாக கூந்தலின் வளர்ச்சிக்கும், மென்மையான சருமத்திற்கும் பயன்படுத்துகிறோம்.

முகப்பரு, கரும்புள்ளி, தேமல் என பல பிரச்சனைகளை போக்குகிறது. இயற்கையான தேங்காய் எண்ணையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றது. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கிறது.

தினமும் வெளியே தூசி படிந்த காற்று, மாசில் நம் சருமத்தில் அழுக்குகள் சேர்ந்திருக்கும். சோப்புகள் உபயோகித்தாலும், அவற்றில் இருக்கும் அமிலத்தன்மை சருமத்தில் சுருக்கம் ஏற்படச் செய்யும். இதற்காக நீங்களே ஏன் ஒரு ஃபேஸ் வாஷ் தயார் செய்யக் கூடாது?

இப்போது சொல்லப்போகும் இந்த ஃபேஸ் வாஷில் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. அவை சருமத்தி முகப்பருவை உருவாக்காமல் தடுக்கும். சுருக்கங்களைப் போக்கும். சரும பிரச்சனைகளை வராமல் காக்கும். அதற்கு தேவையானவை என்னெவென்று பாக்கலாம்.

தேவையானவை : தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் தேயிலை மர எண்ணெய் – 2-3 துளிகள் லாவெண்டர் எண்ணெய் – 2 துளிகள் தேன் -1 டீ ஸ்பூன்

மேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்ணெய்பசை இருந்தால், இவற்றோடு சில துளி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். இல்லையெனில் தேவையில்லை.

முகத்தை ஈரப்படுத்தியபின், இந்த ஃபேஸ் வாஷை கொண்டு முகத்தில் தேய்க்கவும். அரை நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிடுங்கள்.

இப்போது உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும். வாரம் 3-4 முறை இந்த ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம்.

11 25 1466842853

Related posts

ஸ்கின் டானிக்

nathan

சோப் போட்டு குளித்தால் முகம் வறண்டு போகிறதா

nathan

பருக்கள் உள்ளவர்களுக்கான பிரத்யேக ஃபேஷியல்கள் பற்றிக் கேட்டறிந்து அவற்றைச் செய்து கொள்வதே சிறந்தது.

nathan

முகம் உடனடியாக ஜொலிக்க இந்த 5 வழிகளை யூஸ் பண்ணுங்க !!

nathan

முகத்தில் உள்ள கருமை மாயமாய் மறையும் தெரியுமா! சூப்பரா பலன் தரும்!!

nathan

உங்க முகம் பளிச்சுன்னு வெள்ளையாகணுமா? சூப்பரா பலன் தரும்!!

nathan

சூப்பர் டிப்ஸ்! செக்க சிவந்த மென்மையான உதடுகளை பெற, இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்..

nathan

சருமத்தில் கொலாஜனை அதிகரிக்கச் செய்யும் ஃபேஸியல் மாஸ்க் :

nathan

எப்பவும் அழகா இருக்க

nathan