22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ddd
சைவம்

சம்பா கோதுமை புலாவ்

தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை ரவை – 2 கப்,
கேரட், குடமிளகாய், காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி (எல்லாம் சேர்த்து) – ஒன்றரை கப்,
வெங்காயம் – 1,
பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு – தலா ஒன்று,
பிரியாணி மசாலா – அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
* கேரட்டை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.
* பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
* வெங்காயம், காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சம்பா ரவையுடன் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு, பொலபொலவென்று வேக வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயம், காய்கறிகள், வேகவைத்த பச்சைப் பட்டாணி சேர்த்து, உப்பு, பிரியாணி மசாலாவையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
* இதனுடன் பொலபொலவென்று வெந்த ரவையை சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
* சுவையான சத்தான சம்பா கோதுமை புலாவ் ரெடி. பலன்: இது. கார்போஹைட்ரேட், விட்டமின் சத்து நிறைந்தது.ddd

Related posts

வெந்தய சாதம்

nathan

மாங்காய் வற்றல் குழம்பு

nathan

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு

nathan

ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரை

nathan

தயிர் உருளை

nathan

பேபிகார்ன் ஃப்ரை

nathan

சத்தான சுவையான வரகரிசி தக்காளி சாதம்

nathan

அப்பளக் கறி

nathan

தேங்காய் சாம்பார்

nathan