25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
16 1452937485 recipe234
சைவம்

தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு

பயறு வகைகளில் மிகவும் சுவையானது தான் தட்டைப்பயறு. அதிலும் இந்த தட்டைப்பயறை கத்திரிக்காயுடன் சேர்த்து குழம்பு செய்தால், இன்னும் அற்புதமாக இருக்கும். இந்த குழம்பு வீட்டில் உள்ள பெரியோர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானது.

உங்களுக்கு இந்த தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு அதன் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: தட்டைப்பயறு – 100 கிராம் கத்திரிக்காய் – 5 (நறுக்கியது) பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) குழம்பு மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் புளி – 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்) உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு… கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை வெந்தயம் – 1/2 டீஸ்பூன் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முதலில் குக்கரில் தட்டைப்பயறை போட்டு, தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை வடித்து பயறை தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் கத்திரிக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, குழம்பு மிளகாய் தூள் ஒருமுறை கிளறிவிட வேண்டும். பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள தட்டைப்பயறு சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், தட்டைப்பயிறு கத்திரிக்காய் குழம்பு ரெடி!!!

16 1452937485 recipe234

Related posts

சோலே பன்னீர் கிரேவி

nathan

தவா மஸ்ரூம் ரெசிபி

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு – பிரட் பிரியாணி

nathan

வெஜ் பிரியாணி

nathan

அரைக்கீரை மசியல்

nathan

முருங்கைக்காய் அவியல்

nathan

கேரளா பருப்பு குழம்பு

nathan

சத்து நிறைந்த நெல்லிக்காய் சாதம்

nathan

வெந்தயக் குழம்பு/ vendhaya kuzhambu

nathan