28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
201610191153458776 roasted pepper garlic kulambu SECVPF
சைவம்

வறுத்தரைத்த மிளகு – பூண்டு குழம்பு செய்வது எப்படி

உடலுக்கு ஆரோக்கியமான இந்த வறுத்தரைத்த மிளகுக் குழம்பை வாரம் ஒருமுறை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

வறுத்தரைத்த மிளகு – பூண்டு குழம்பு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் – 1 கப்,
புளி – எலுமிச்சை அளவு,
தக்காளி – 4,
எண்ணெய் – 5 ஸ்பூன்,
கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பூண்டு – 10 பல்
கறிவேப்பிலை – சிறிது.

அரைக்க :

மிளகு, சீரகம் – தலா 2 டேபிள் ஸ்பூன்,
உளுந்து, கடலை பருப்பு தலா – 2 டீஸ்பூன்,
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
சுக்கு – 1 துண்டு,
மிளகாய் வற்றல் – 4.

செய்முறை :

* புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வையுங்கள்.

* பூண்டு, வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

* வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு வறுத்து, ஆறவைத்து கால் கப் தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* கடாளை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு, தக்காளியை சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள்.

* நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசல், அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கறிவேப்பிலை தூவி இறக்குங்கள். 201610191153458776 roasted pepper garlic kulambu SECVPF

Related posts

சுவையான புதினா புலாவ்

nathan

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி

nathan

பெங்காலி ஸ்டைல் காலிஃப்ளவர் குழம்பு

nathan

சூப்பரான சைடிஷ் தயிர் உருண்டை குழம்பு

nathan

பேபி உருளைக்கிழங்கு பெப்பர் ஃப்ரை

nathan

வாழைக்காய் பொடி

nathan

சுவையான காலிஃப்ளவர் குருமா

nathan

வெண்டைக்காய் சாதம்

nathan

சுவையான செட்டிநாடு பலாக்காய் கறி

nathan