201610170802583544 how to make fish korma SECVPF
அசைவ வகைகள்

சூப்பரான மீன் குருமா செய்வது எப்படி

மீன் குழம்பு செய்து அலுத்து போனவர்கள் சற்று வித்தியாசமாக மீன் குருமா செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான மீன் குருமா செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

(வாழை மீன் அல்லது நெத்திலி மீன் மட்டும்)
வாழை மீன் – 3
பொட்டுக் கடலை – 2 டீஸ்பூன்
தேங்காய் – அரை மூடி
பச்சை மிளகாய் – 20 (நீளமாக நறுக்கவும்)
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
நாட்டுத் தக்காளி – 4 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
புளிப்பு மாங்காய் – 1
கொத்தமல்லி – ஒரு கையளவு

செய்முறை :

* வாழைமீனை (கழுவி) துண்டு, துண்டாக நறுக்கவும்.

* தேங்காய் சோம்பு, பொட்டு கடலையை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* மாங்காயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் சூடானதும் விட்டு சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்த தேங்காய் கலவை, சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு மீன், மாங்காய் போட்டு நன்றாக கொதி வந்து மீன் வெந்ததும் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான மீன் குருமா ரெடி.201610170802583544 how to make fish korma SECVPF

Related posts

ஆட்டுக்கால் பாயா | attukal paya

nathan

இறால் சில்லி 65

nathan

இறால் சாதம்

nathan

காடை முட்டை குழம்பு

nathan

தேங்காய்ப்பால் மட்டன் பிரியாணி

nathan

நெத்திலி மீன் வறுவல்

nathan

மாட்டிறைச்சி பிரியாணி செய்முறை ,மாட்டிறைச்சி பிரியாணி எப்படி சமைக்க வேண்டும்,tamil samayal biryani,tamil easy samayal

nathan

நாட்டுக்கோழி வறுவல் செய்ய வேண்டுமா?…

nathan

சன்டே ஸ்பெஷல்: சிக்கன் கோழி பிரியாணி

nathan