27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
201610141055228962 red rice aval chapati SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்தி

சிவப்பு அவல், கோதுமை உடலுக்கும் மிகவும் நல்லது. இது இரண்டையும் வைத்து எப்படி சப்பாத்தி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்தி
தேவையான பொருட்கள் :

சிவப்பு அவல் – முக்கால் கப்,
கோதுமை மாவு – 1 கப்,
சற்று புளித்த தயிர் – 1 கப்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா (விரும்பினால்) – அரை டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் அல்லது நெய் – தேவைக்கு.

செய்முறை :

* அவலைச் சுத்தம் செய்து, அதனுடன் தயிர், சிறிதளவு உப்பு சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

* 1 மணிநேரம் கழித்த பிறகு அதனுடன் கோதுமை மாவு, மிளகாய்த் தூள், உப்பு, சீரகம், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

* இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திகளாகத் தேயுங்கள்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சாப்பாத்திகளை போட்டு சுற்றி எண்ணெய் அல்லது நெய் விட்டுச் சுட்டெடுங்கள்.

* சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்தி ரெடி.

* வழக்கமாக சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளும் அனைத்து சைடு டிஷ்களும் இதற்கும் பொருந்தும். அதிலும் குறிப்பாக கெட்டி பருப்புக் கலவை பெஸ்ட் காம்பினேஷன். 201610141055228962 red rice aval chapati SECVPF

Related posts

ஈஸியாக செய்யக்கூடிய குடைமிளகாய் புலாவ்

nathan

சத்து நிறைந்த கேரட் – முந்திரி அடை

nathan

கான்ட்வி

nathan

மட்டர் தால் வடை

nathan

பிள்ளையார்பட்டி மோதகம்:

nathan

வெஜிடபிள் உருண்டை

nathan

சுவையான அவல் உப்புமா

nathan

குழந்தைகளுக்கு சத்தான பொட்டுக்கடலை லட்டு

nathan

ஸ்நாக்ஸ்: சூப்பரான உருளைக்கிழங்கு கட்லெட்

nathan