26.3 C
Chennai
Monday, Dec 23, 2024
201610140721273196 new shirts Wear for youth SECVPF
ஃபேஷன்

இளைஞர்கள் அணிய ஏற்ற புதிய சட்டைகள்

அந்தந்த பண்டிகைக்கு ஏற்றவாறு புதிய டிரெண்ட், புதிய வண்ண கலவை, பேட்டர்ன் என்பதுடன் தையல் அமைப்பினும் மாறுபட்டவாறு வருகின்றன.

இளைஞர்கள் அணிய ஏற்ற புதிய சட்டைகள்
தற்கால இளைஞர்கள் அவ்வப்போது தங்கள் ஆடை வடிவமைப்பு முறையில் மாற்ற செய்யவே எத்தளிக்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு பண்டிகை காலம், விழாக்காலம் போன்றவைகளில் புதிய வடிவமைப்புடன் கூடிய ஆடைகள் விற்பனைக்கு வருகின்றன. அவை அந்தந்த பண்டிகைக்கு ஏற்றவாறு புதிய டிரெண்ட், புதிய வண்ண கலவை, பேட்டர்ன் என்பதுடன் தையல் அமைப்பினும் மாறுபட்டவாறு வருகின்றன.

இதில் ஆண்கள் அணியும் சட்டைகள் தான் பெரிய மாற்றத்தை பெறுகின்றன. அவை குறிப்பாக இளைஞர்களை மனதில் கொண்டே வடிவமைக்கப்படுகின்றன. அந்தந்த காலகட்டத்தில் சினிமா ஹீரோக்கள் அணியும் சட்டை வகைதான் முன்பு பிரபலமாயின. தற்போது சர்வதேச அளவில் ஆடை வடிவமைப்பு மேம்பட்டு வருவதுடன், ஆன்லைன் ஆடை வடிவமைப்பு மற்றும் விற்பனையகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய வடிவமைப்பு சட்டைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதனால் இளைஞர்கள் புதிய சட்டைகளை அவ்வப்போது வாங்கி அணிகின்றனர்.

புதிய வரவு மேல் சட்டைகள் :

மேல்சட்டைகள் என்பவை வண்ணத்தில், பேட்டர்ன், டிசைன், கட்டிங் போன்றவற்றில் புதிய அவதாரமெடுத்து அணிவகுக்கின்றன. இந்த சீசனில் ஆண்கள் மேல் சட்டைகளில் புதிய வரவாக நேரு கோர்ட் மாடல் சட்டை, பிரண்ட் டபுள் லைன் சட்டை, பெரிய மற்றும் டபுள் காலர் சட்டை, பூக்கள் டிசைன் சட்டை, ஷார்ட் சிலிவ் சட்டை போன்றவை வந்துள்ளன.

நேரு கோட் மாடல் சட்டை :

சென்ற சீஸனில் சட்டையின் மேல் நேரு கோட் போடும் வகையிலான ஆடை அறிமுகமாகியது. தற்போது சட்டை தனியே கோட் தனியே என பிரித்து போடுவது இயலாது என்பதால் அந்த மாடலில் முழு சட்டையே தனியாக தைக்கப்பட்டுள்ளது. அதாவது கோட் மாடலில் உடல் பகுதி வேறு வண்ணத்திலும் அதில் பட்டன் தனிப்பட்ட வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சட்டையின் கைப்பகுதி வேறு வண்ணத்தில் பெரும்பாலும் வெண்மையான வண்ணத்தில் இருக்கும். இது சட்டை மேலே கோட் அணிந்து இருப்பது போன்ற தோற்றத்தை தரும்.

பிரண்ட் டபுள் லைன் சட்டை :

சட்டையின் காலர், நடு பட்டன் பகுதி கஃப் போன்றவாறு ஒரு நிறத்திலும் சட்டை பிற்பகுதி ஒரு நிறத்திலும் இருந்தன. தற்போது அதிலும் புதுமையாய் சட்டையின் காலர் பகுதியில் இருந்து சற்று கீழிறங்கி மார்பு பகுதி பட்டன் வரை ஒருபக்கமாய் வேறு வண்ண அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இது இளைஞர்கள் அணிய ஏற்ற புதிய ஸ்டைல் சட்டையாக உள்ளது.

கிராஸ் லைன் சட்டைகள் :

நேரான கோடுகள் கொண்டவாறும், கட்டங்கள் கொண்டவாறும் வந்த சட்டைகள் தற்போது கிராஸ் லைன் சட்டைகளாக உருமாறி உள்ளன. இந்த கிராஸ் லைன் என்பது சட்டையின் ஒருபக்க தோள்பட்டை மற்றும் அதற்கு நேர் எதிர் இடுப்பு பகுதியில் உள்ளவாறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. இதில் நடுப்பகுதி மற்றொரு கிராஸ்லைனாக வந்து வேறு நிறத்தில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. தோள்பட்டை பின்பகுதியில் மட்டும் கிராஸ்லைன் கொண்ட சட்டைகளும் உள்ளன.

மிலிட்டரி டைப் சட்டைகள் :

மிலிட்டரி வகை சட்டைகள் என்பது தோள்பட்டையில் ஸ்ட்ராப், பேட்ச் பாக்கெட் இருபுறமும், உலோக பட்டன் உள்ளவாறு உள்ளன. இதன் நிறம் என்பது பெரும்பாலும் அடர்பச்சை மற்றும் அடர்நீலம் உள்ளவாறு உள்ளன. புதிய மாறுபட்டை டிசைன்களை தேடுபவருக்கு மிலிட்டரி மாடல் சட்டை சிறந்த தேர்வாக இருக்கும். 201610140721273196 new shirts Wear for youth SECVPF

Related posts

100 புடவை கட்டுங்கள் புதுமைப் பெண்களே!

nathan

உங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் தெரியுமா?இதை படியுங்கள்

nathan

பிஞ்ச பேண்ட்… பேட்ச் வொர்க்! – கேர்ள்ஸின் ட்ரெண்ட் இதுதான்!

nathan

பெண்களுக்கு அழகு தரும் ஆடைகள்

nathan

சிறுவர்களின் ஆடையில் புதிய வரவுகள்

nathan

பண்டிகைகள் மற்றும் விழாக்களில் ஆண்களுக்கான அழகிய ஆடை எது தெரியுமா?..

sangika

நவீன மங்கையர் விரும்பும் டியூனிக் குர்தாக்கள்

nathan

பட்டுப்பெண்களின் பளபள புடவைகள்!

nathan

ஒட்டியாணம் இளம் பெண்கள் அவசியம் அணிய வேண்டுமாம்!…

sangika