சிறுவர்களுக்கான ஆடையை புதிய வடிவமைப்பில் தேர்ந்தெடுத்து அளிப்பது பெற்றோர்களுக்கு பெரிய சிரமம்.
சிறுவர்களின் ஆடையில் புதிய வரவுகள்
புத்தம் புதிய ஆடைகளை அணிவது என்றாலே சிறுவர்களுக்கு அலாதி இன்பம். பெண் குழந்தைகளை போன்று அதிக மாடல் மற்றும் டிசைன்களில் தற்போது ஏராளமான ஆடை வகைகள் அணிவகுத்து நிற்கின்றன. விதவிதமான வண்ணம் மற்றும் சிறு சிறு மாற்றம் கொண்ட டிசைன், பிரத்யோகமான பண்டிகை கால வடிவமைப்பு என அனைத்து வயது சிறுவர்களுக்கு ஆடைகள் அணிவகுத்து நிற்கின்றன.
சிறுவர்களுக்கான ஆடையை புதிய வடிவமைப்பில் தேர்ந்தெடுத்து அளிப்பது பெற்றோர்களுக்கு பெரிய சிரமம். தற்போது அந்த கவலையும் இல்லை. காரணம் பள்ளிகளிலேயே சிறுவர்களுக்கு கலந்துரையாடி நமக்கு சீசன் டிரெண்ட் தெரிவதற்கு முன் அவர்களுக்கு தெரிந்து தீர்மானித்து விடுகின்றனர்.
எனக்கு இந்த பண்டிகைக்கு இந்த மாதிரியான பேண்ட் மற்றும் சட்டை தான் வேண்டும் என பெற்றோரிடம் கட்டளையே பிறப்பித்து விடுகின்றனர். ஆண் பிள்ளைகளின் ஆடைகள் எனும் போது முன்பு பேண்ட், சட்டை (அ) ட்ரவுசர் சட்டை தையல் கடையில் தைத்து தருவர். ஆனால் தற்போது விதவிதமான ஆயத்த கடைகள் முதல் ஆன்லைன் கடைகள் அனைத்திலும் புதுமையான ஆடைகளின் அணிவகுப்பு நிகழ்கிறது. சீசனுக்கு ஏற்ப சிறுவர் ஆடைகளும் மாற்றம் பெறுகிறது.
சிறுவருக்கு ஏற்ற சிறப்பான ஆடைகள் :
சிறார்கள் விரும்பி அணியும் ஜீன்ஸ் பேண்ட் முதல் பார்மல், கேஷ்வல், பார்ட்டிவேர், வேஷ்டி சட்டைகள் என அனைத்தும் பெரிய ஆடவர் அணியும் டிசைன்களிலேயே தயார் செய்து தரப்படுகிறது. இதன் சிறுவர்களுக்கு புதிய ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் பலவித சாய்ஸ் கிடைக்கின்றன. ஆடம்பரமான ஆடைகள் எனில் ஷெர்வாணி, குர்தா, கோர்சூட் போன்ற ஆடைகளும் உள்ளன. இதில் சிறுவருக்கு பிடித்தமானவை என்பது வண்ணமயமான ஆடைகள் தான்.
விதவிதமான பொம்மை பதித்த விஸ்ட் கோட் :
இந்த பண்டிகை கால புதுவரவுகளில் சாதாரண பேண்ட் மற்றும் மேல் முழுகை சட்டை குர்தா அணிந்து அதன் மேல் விஸ்ட் கோட் அணியும் ஆடை வந்துள்ளது. இந்த விஸ்ட்கோட் என்பது எந்த வண்ண ஆடைக்கு பொருத்தமானது என்றவாறு உள்ளது. இதன் மேற்புறம் பிளைனாக இருக்கும். தற்போது அதில் குழந்தைகள் விரும்பும் ஸ்கூட்டி, ஹெலிகாப்டர், டிரெயின், பஸ் போன்ற வாகன பொம்மை அச்சுகள் பதியப்பட்டுள்ளன. இது அணியும் போது சிறார்கள் தங்களுக்கு பிடித்த வாகன விளையாட்டு விளையாடுவது போன்ற உணர்வு தோன்றுகிறது.
தந்தை மகன் ஆடைகள் :
சிறார்கள் அணிகின்ற ஆடைகளில் தற்போது ஒரே மாடல் தந்தைக்கும், மகனுக்கும் உள்ளவாறு வடிவமைத்து தரப்படுகிறது. முன்பு ஒரே பிட் எடுத்து அப்பா, மகன் இருவரும் ஒரே மாதிரியாய் ஆடைகளை தைத்து கொள்வர். அதுபோல் ஒரே மாதிரியான டிசைனில் பேண்ட்-சட்டை உள்ளவாறு அப்பா-மகன் இருவரும் ஒரு சேர நிற்பது ஒரே மாதிரியான இரட்டையர்கள் அணிய ஏற்றவாறும் ஒரே மாதிரியான வடிவமைப்பு சட்டைகள் பிரத்யோகமாக சில கடைகளில் கிடைக்கின்றன.
காக்கியும், கரும்பச்சையும் கலந்த பேண்ட்கள்:
பெரியவர்கள் அணிகின்ற இராணுவ பேண்ட் மாடலில் காக்கியும், கரும்பச்சை புள்ளிகள் நிறைந்த பேண்ட்கள் வரத்தொடங்கியுள்ளன. இந்த பேண்டில் நிறைய பாக்கெட் மற்றும் உலோக தொங்கல்கள் உள்ளன. இது சிறார்களுக்கு மிக விருப்பமான பேண்ட் ஆக உள்ளது.
அதுபோல் விழாக்காலங்களில் அணிகின்ற குர்தா டைம் ஆடைகளில் பேண்ட் என்பது பெரும்பாலும் கேதரிங் பேண்ட் தான் இணைப்பாக உள்ளது. கேதரிங் பேண்ட் ஆக மாறிவிடுகிறது. சிறுவர்கள் அணிய பார்மல், கேஷ்வல் பேண்ட்களும் வந்துள்ளன.