25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
1444199096 4463
அசைவ வகைகள்

சுவையான காலிஃபிளவர் முட்டை பொரியல்

காலிஃபிளவர் முட்டை பொரியல் மதிய உணவிற்கு சிறந்த சைடிஷ் ஆக இருக்கும். இதன் சுவை குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் இதை கொடுக்கும் போது, அவர்களிடம் இது சிறந்த வரவேற்பாக இருக்கும். குறைந்த நேரத்தில் செய்து முடிப்பதால் நேரம் குறவாக இருக்கும் போது உங்கள் விருப்ப சமையலாக இது இருக்கும்.

தேவையான பொருட்கள்

* காலிஃபிளவர் – 300 கிராம்
* முட்டை – 2
* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
* உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

* எண்ணெய் – தேவையான அளவு
* கடுகு – சிறிது
* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை

* முதலில் காலிஃப்ளவரை சிறிதாக நறுக்கி 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். அதில் அவித்து வைத்த காலிஃபிளவரை போட்டு வதக்கவும்.

* வதங்கியதும் அதில் மிளாகாய் பொடி, உப்பு போட்டு நன்கு கிளரவேண்டும்.

* பின்பு அதில் முட்டையை அடித்து விட்டு நன்கு கிளரவேண்டும்.

* இப்போது சுவையான காலிஃபிளவர் முட்டை பொரியல் தயார்.1444199096 4463

Related posts

இறால் உருளைக்கிழங்கு ஃபிரை

nathan

சுவையான இறால் சுக்கா மசாலா

nathan

ஃபிங்கர் சிக்கன்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65

nathan

முட்டை பிரியாணி செய்வது எப்படி

nathan

சுவையான கேரளா சிக்கன் ப்ரை

nathan

கசகசா பட்டர் சிக்கன்

nathan

சுவையான யாழ்ப்பாண வாசம் வீசும் கணவாய் பிரட்டல்: செய்வது எப்படி?

nathan

சூப்பர் நண்டு வறுவல்

nathan