25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1450083137 3934
சைவம்

பாசிப்பருப்பு உருண்டை குழம்பு

அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்த கோளாஉருண்டை குழம்பு மாதிரி, சைவ பிரியர்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு மிகவும் அருமையான சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – ஒரு கப்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தனியாத் தூள் – 2 ஸ்பூன்
அரிசி மாவு – ஒரு ஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

தயார் செய்து கொள்ள வேண்டியவை:

பாசிப்பருப்பை ஊற வைத்து அதனுடன் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, தேவையான உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து, தண்ணீர் விடாமல் நைஸாக அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். மாவை சுறு சிறு

உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி தக்காளி போடவும்.

இவை யாவும் நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கி புளித் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து, பச்சை வாசனை போனதும் ஆவியில் வத்த உருண்டைகளை எடுத்து குழம்பில் சேர்த்து கொதிக்கவிடவும்.

பாசிப்பருப்பு உருண்டை குழம்பு ரெடி.1450083137 3934

Related posts

மஷ்ரூம் பிரியாணி

nathan

சுவையான பன்னீர் குருமா செய்வது எப்படி

nathan

உருளை வறுவல்

nathan

நெல்லிக்காய் சாதம்

nathan

மேங்கோ கர்டு ரைஸ்

nathan

சூப்பரான கொண்டைக்கடலை குருமா

nathan

பனீர் 65

nathan

ஃபிளாக்ஸ் சீட்ஸ் பருப்பு பொடி

nathan

ஸ்நாக்ஸ் சோயா 65

nathan