26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
pineapple sheera recipe for durga puja 03 1475496898 05 1475650391
இனிப்பு வகைகள்

நவராத்திரி துர்கா பூஜா ஸ்பெஷல் : அன்னாசிப்பழ அல்வா!

நவராத்திரி தொடங்கிவிட்டது. பெங்காலி வீடுகளில் மஹாஸப்தமி அன்று போடோன் எனப்படும் சிலை திறப்புடன் துவங்கும் துர்கா பூஜைக்காக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜய தசமி அன்று உங்கள் சுற்றத்தாரை வரவழைத்து அவர்களுக்கு பல்வேறு வகையான இனிப்புகள் மற்றும் உணவுகளை வழங்குவீர்கள். இந்த முறை அன்னாசிப் பழ கேசரியை நீங்கள் ஏன் முயன்றுபார்க்கக் கூடாது? உங்களுக்கு கேசரி செய்யத் தெரியுமென்றால் அன்னாசிப் பழத்தின் நறுமணம் அதற்கு கூடுதல் சிறப்பை வழங்கும். நீங்கள் சாக்லேட் கேசரி அல்லது வாழைப்பழ கேசரியையும் கூட இதே முறையில் செய்யலாம். இன்று அன்னாசிப்பழ கேசரி செய்யும் முறைகள் மற்றும் தேவையான பொருட்கள் குறித்து குறிப்புகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்த நவராத்திரிக்கு இதை செய்து பார்த்து பண்டிகையை நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடுங்கள்.

எத்தனை பேர் சாப்பிடலாம்? 4 பேர் தயார் செய்யத் தேவையான நேரம்: 5 நிமிடங்கள் சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள் தேவையான பொருட்கள்: 1. அன்னாசிப்பழம் : ஒரு கப் 2. நெய் : 1 மேஜைக்கரண்டி 3. சர்க்கரை : 1 மேஜைக்கரண்டி 4. கொழுப்பு குறைந்த பால்: 1 கப் 5. செமொலினா : 1 கப் 6. இனிப்பூட்டி (சர்க்கரைக்கு பதிலாக): 3 மேஜைக்கரண்டி 7. ஏலக்காய் தூள் : 1 தேக்கரண்டி 8. குங்குமப்பூ : சிறிதளவு

செய்முறை : 1. ஒரு ஆழமான வாணலியில் அன்னாசிப்பழக்கூழைப் போட்டு அதனுடன் சர்க்கரை அல்லது இனிப்பூட்டியை சேர்த்துக் கலக்கவும். 2. இதை 3-4 நிமிடங்கள் கொதிக்க விடவும். 3. செமொலினாவை நெய் விட்டு மிதமான சூட்டில் இளம் சிவப்பாக மாறும்வரை வறுக்கவும். அவ்வாறு மாற நேரம் எடுக்கும் என்பதால் பொறுமையுடன் செய்யவும். 4. இப்போது அதில் பால் சேர்த்து நீர் விட்டு நன்றாக கிளறவும். இல்லையென்றால் கட்டியாக ஆகிவிடும். 5. இந்த கலவை கெட்டிப்பட்டவுடன் இதில் இனிப்பூட்டியைச் சேர்த்து வறன்டுபோகும் வரை கிளறவும். 6.இதனுடன் ஏற்கனவே செய்து வைத்துள்ள அன்னாசிப்பழக்கலவையை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும். 7.இதில் பாலில் ஊறவைத்த குங்குமப்பூவையும் ஏலக்காய் தூளையும் சேர்த்து இரண்டு நிமிடம் சூட்டில் வைத்துக் கிளறவும். 8.உங்கள் அன்னாசிப்பழ கேசரி தயார். இதனை கண்ணாடிக் கிண்ணத்தில் போட்டு மூடியைக் கொண்டு மூடி தலைகீழாக மெதுவாக திருப்பினால் ஒரு வித்தியாசமான வடிவில் கிடைக்கும். இதனை உலர்ந்த பழங்கள் மற்றும் பருப்புகள் கொண்டு அலங்கரிக்கலாம்.

pineapple sheera recipe for durga puja 03 1475496898 05 1475650391

Related posts

பேரீச்சை புடிங்

nathan

சுவையான பேல் பூரி ரெசிபி

nathan

விளாம்பழ அல்வா

nathan

புதுவருடபிறப்பு ஸ்பெஷல் கச்சான் அல்வா செய்முறை விளக்கம்

nathan

சுவையான மைதா மில்க் பர்பி

nathan

குல்கந்து ரவை அல்வா

nathan

திருநெல்வேலி அல்வா

nathan

ஆப்பிள் அல்வா

nathan

சுவையான அவல் கேசரி- ருசியாக செய்யும் எளிய முறை

nathan