27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
9 17 1466163914
முகப் பராமரிப்பு

உங்கள் நெற்றியில் விழும் சுருக்கங்களை மறையச் செய்யும் ஒரே ஒரு டிப்ஸ் !!

நம்மில் நிறைய பேருக்கு வரிகள் போல சுருக்கங்கள் ஏற்படும். இதற்கு நிறைய காரணங்கள் உண்டு. வயதாவது ஒரு காரணம்.

அதை தவிர்த்து இளம் வயதிலேயே சிலருக்கு சுருக்கங்கள் வளரும். மென்மையான சருமம் பெற்றிருந்தால், அடிக்கடி நெற்றியை சுருக்குவதால் இது போன்று கோடுகள் உருவாகும். பின்னர் அது அப்படியே நிலைத்திடும்.

இதனை கடைகளில் விற்கும் க்ரீம்களை கொண்டு நீக்க முயற்சித்தால் சுருக்கங்கள் அதிகமாகிவிடும். நம் வீட்டிலேயே எளிய முறையில் இந்த சுருக்கத்தை போக்கிவிடலாம்.

அதற்கு தேவை மூன்று பொருட்கள். வாழைப்பழம் தேன் மற்றும் தயிர் இந்த மூன்றும் சேர்ந்த கலவை நெற்றியில் விழும் விடாப்படியான சுருக்கங்களையும் மறைக்க வைக்கும் ஆற்றல் கொண்டுள்ளவை. அவைகளில் உள்ள தேவையான சத்துக்கள் சருமத்திற்கு போஷாக்கு தருகின்றன.

இவற்றைக் கொண்டு எப்படி நெற்றியின் சுருக்கங்களை போக்குவது என பார்க்கலாம். தேவையானவை : வாழைப்பழம் – 1 தயிர் – 2 டேபிள் ஸ்பூன் தேன் – 1டேபிள் ஸ்பூன்

வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் தயிர் ஆகியவற்றை கலந்து நெற்றியில் பேக் போல் போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 2- 3 முறை செய்தால் விரைவில் நெற்றியில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் மறைந்து, அழகான பிறை போன்ற நெற்றியை பெறுவீர்கள்.

9 17 1466163914

Related posts

ஃபேஸ் மாஸ்க் போடும் போது கவனிக்க வேண்டியவை

nathan

உங்க உதடு கன்னங்களில் உண்டாகும் கருமையை போக்குவது எப்படி தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

பளிச்சென முகத்தை பராமரிக்க டிப்ஸ்கள் இதோ!….

nathan

பெண்களே பளிச்சென்ற முகம் வேண்டுமா? அப்ப தினமும் ஆவி புடிங்க….

nathan

முகம் பட்டுப்போல் பளபளப்பாக இவற்றை செய்து வாருங்கள்…

sangika

பூசணிக்காய் வச்சு கூட்டு மட்டுமல்ல உங்க அழகையும் வச்சு செய்யலாம்!!முயன்று பாருங்கள்

nathan

தக்காளி பேஷியல் செய்வது எப்படி?

nathan

மாம்பழ ஃபேஸியல் செய்வதால் பெறும் சரும நன்மைகள்!

nathan

முகத்திற்கு ப்ளீச்சிங் செய்தால் ஏற்படும் பிரச்சனைகள்

nathan