201610070720097892 different bridal blouse designs SECVPF
ஃபேஷன்

ப்ரைடல் ப்ளவுஸ் – விதவிதமான வடிவமைப்பும் அசத்தும் டிசைன்களும்

வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் விதவிதமான டிசைன்களில் வேலைப்பாடுகள் நிறைந்த சோளிகள் கிடைக்கின்றன.

ப்ரைடல் ப்ளவுஸ் – விதவிதமான வடிவமைப்பும் அசத்தும் டிசைன்களும்
நாகரிக வளர்ச்சியில் பெண்களுக்கென எவ்வளவுதான் விதவிதமான ஆடைகள் வந்தாலும், என்றும் பெண்களை பெரிதும் கவர்வது நம் பாரம் பரிய உடையான சேலையும், ரவிக்கையும்தான். அதில் இப்போது திருமண விழாக்களுக்கென தனியாக வடிவமைக்கப்படும் சேலைகள் மற்றும் அவற்றிற்கான ப்ளவுஸ் வகைகளுக்கு இப்போதும் பெரும் வரவேற்பு கூடியுள்ளது என்று சொல்லலாம்.

டிசைனர் சேலைகள், ஜக்கார்ட், லினென், சேடின், ஹாஃப் சில்க், ஆர்ட்சில்க், ஷிஃபான், க்ரேப் போன்றவையே இன்றைய இளம் பெண்களின் விருப்பமுள்ள தேர்வாக இருக்கிறது. பிரபலங்கள் மற்றும் மேல் தட்டு வர்க்கத்தினர் மட்டுமே சோளிகளை அணியும் காலம் போய் இப்போது அனைவரும் அணியத்துவங்கியுள்ளனர்.

விதவிதமான நெக் டிசைன்கள், அவற்றில் விதவிதமான வேலைப்பாடுகளுடன் கூடிய வடிவமைப்புகள் என்று திருமண சோளிகள் ஆயிரங்களில் விலைபோகின்றன. இவற்றில் எம்பிராய்ட்டரி செய்யப்பட்டு அதில் ஸ்டோன் பதித்து செய்யப்படும் சோளிகளும் அடங்கும். இவற்றில் இன்னும் பிரத்யேகமாக சேலையில் வரும் சரிகையின் நிறத்திற்கு ஏற்ற வகையில் அதே கலரில் வருவதுபோல் எம்பிராய்ட்டரி செய்யப்படுகிறது.

இப்போது திருமண சோளிகளை வடிவமைப்பதற்கு நிறைய இணையதளங்களும் இருக்கின்றன. அவர்களிடம் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் விதவிதமான டிசைன்களில் வேலைப்பாடுகள் நிறைந்த சோளிகள் கிடைக்கின்றன.

முன்பக்க கழுத்து டிசைனுடன் பின்புறக் கழுத்திற்கு “பா” வடிவ டிசைன் மற்றும் விதவிதமான ‘கட் வொர்க்’ களுடன் கூடிய வடிவங்களும் வருகிறது. இவற்றை அணியும் போது தோற்றப்பொலிவும் கம்பீரமும் கூடுவதாக பெண்கள் உணர்கிறார்கள். அன்னம் மயில் , தாமரை, மாங்காய் டிசைன் களில் வேலைப்பாடுகளுடன் கிடைக்கிறது. மேலும் ஜரிகை வைத்து ஓரங்களில் இணைத்தும் தருகிறார்கள்.

மேலும் நகை அலங்காரங்கள் போல ப்ளவுஸ்களில் இணைத்து தைப்பதற்கென்றே நிறைய கல்வைத்த டிசைன்கள் ரெடிமேடாக கடைகளில் கிடைக்கிறது. பட்டுபுடைவைகள் எடுக்கும் பெரிய கடைகளில் கூட இவை விற்கப்படுகின்றன. எனவே புடவை வாங்கும்போதே அதே நிறத்தில் சோளிகளில் வைத்து தைப்பதற்கும் இந்த கல்வைத்த டிசைன்களை வாங்குகின்றனர்.

கல்யாண பெண்களுக்கு என்று மட்டும் இல்லாமல், நிச்சயதார்த்தம், திருமண வரவேற்ப்பு என்று விசேஷங்களில் கலந்துகொள்பவர்களுக்கும், இதுபோன்ற டிசைனர் ப்ளவுஸ்கள் மிகவும் விருப்பமுள்ளதாக இருக்கிறது.

கடைகளில் ரெடிமேட்டாக ப்ளவுஸ்கள் கிடைத்தாலும், பெண்கள் பெரும்பாலும், அளவுகொடுத்து தைப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். பெண்களின் உடல் வாகு காலத்திற்கு ஏற்றார்போல் மாறும் தன்மையுடையது, அதனால் ஒருசமயம் சரியாக இருக்கும் ப்ளவுஸ்களின் அளவு இன்னொரு சமயம் அதேபோல் இருக்காது, டைட்டாகவோ, இல்லை பெரிதாகவோ மாறும், அதனால் அளவுகொடுத்து தைக்கும்போது, ஆல்ட்ரேஷன் செய்துகொள்ளலாம். அதே போல் ஒரே ஒரு தோள்பட்டையில் மட்டுமே ப்ளவுஸ் இணைவது போலும், பின்புறம் முடிந்துகொள்வதுபோலும் ப்ளவுஸ்கள் வடிவமைக்கப்படுகின்றன.

மெல்லிய கயிறு களால் இணைக்கப்படும் கழுத்து டைசன் ஸ்பெகடி நெக் என்று அழைக்கப்படுகிறது. இது இப்போது ட்ரெண்ட்டில் உள்ள டிசைன்களில் ஒன்று. இந்த மெல்லிய கயிறுகளில் இருந்து பளபளக்கும் குஞ்சலங்கள் கொடுக்கப்பட்டு அது இணைக்கப்படுகிறது. ஹால்டர்நெக், கோர்சேட் ஸ்டைல்களிலும் டிசைன்கள் மிக அழகாக கண்கவரும் விதமாகவும் கிடைக்கின்றன. 201610070720097892 different bridal blouse designs SECVPF

Related posts

புடவைக்கான சிறந்த ஹேர் ஸ்டைல் எது?

nathan

ஆண்கள் அழகை பேணுவதில் கவனம் வேண்டும்!…

sangika

பெண்களின் ஆடை கலாச்சாரம் பாதுகாப்பானதா? ஆபத்தானதா?

nathan

கலைநயம் பொருந்திய நவீன நெக்லஸ் வகைகள்

nathan

டிசைனர் சேலையை வேறு பயன்பாடுக்கு மாற்ற முடியுமா?

nathan

டாட்டூஸ் சின்னங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான அர்த்தம் இருக்கிறது!…

sangika

மலர்களின் தோரணமாய் – ஷிக்கன்காரி சேலைகள்

nathan

சேலையை விரும்புது இளைய தலைமுறை!

nathan

உங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் தெரியுமா?இதை படியுங்கள்

nathan