உலக அழகியா கூட வேண்டாம் .. உள்ளூர் அழகியா மாறனும்னு எல்லாருக்குமே ஆசை இல்லாம இருக்காது. ஆனா அதுக்கான எந்த முயற்சியுமே எடுக்காமல் அது எப்படி சாத்தியமாகும். முடிஞ்ச வரை உங்கள் சருமம் எதை பாதகம் இல்லாம ஏத்துக்குதோ அதையெல்லாம் பயன்படுத்தலாம். சருமம் இளமையாகவும், ஜொலிஜொலிப்போடும், களை கட்டும்.
செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்காத எளிய டிப்ஸ் தான் இங்கே குறிப்பிட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.
வெள்ளரிக்காய் +மஞ்சள் : வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். அரை ஸ்பூன் வெள்ளரிக்காய், அரை ஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் பேக்காக போடவும்.15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த கலவை சருமத்தை மெருகேற்றும். மென்மையான சருமம் கிடைக்கும். வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கிவிடும்.
அவகாடோ + தேன் : அவகாடோவின் சதைப் பகுதியை எடுத்து மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தேயுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இவை சருமத்தில் உள்ள நுண்ணிய சுருக்கங்களை போக்க அருமையான குறிப்பு.
கடலை மாவு +உருளைக் கிழங்கு சாறு : உருளைக் கிழங்கில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின் கடலை மாவு 4 ஸ்பூன் எடுத்து, அதில் சிறிது உருளைக் கிழங்கு சாறு சேர்த்து கலக்குங்கள்.பேஸ்ட் போல ஆனவுடன் அதனை முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். மாசு மரு இன்றி முகம் நிறம் பெற்று மின்னும்.
பால் பவுடர்+ தேங்காய் நீர் இரண்டையும் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இவற்றை முகத்தில் போட்டு நன்றாக காய்ந்ததும் கழுவிடலாம். தேங்காய் நீரில் புரோட்டின் உள்ளது. இது ஈரப்பதத்தை அதிகப்படுத்தும். கொலாஜன் உற்பத்தியை தூண்டும். பால் பவுடரில் இருக்கும் லாக்டிக் அமிலம் சுருக்கங்களைப் போகும். கிருமிகளின் தொற்றுக்களை அழித்துவிடும்.
சந்தனம் + ரோஸ் வாட்டர் : சந்தனத்தை கடையில் வாங்குவதை விட அரைத்து எடுத்துக் கொள்வது நல்லது. அரைத்த சந்தனத்தில் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவுங்கள்.
இவை சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமையை போக்கிவிடும். ஈரப்பதத்தை அளித்து சுருக்கங்களை நீக்கிவிடும். இந்த குறிப்பு சென்ஸிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.