25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201609301031114287 Thick eyebrows to be done at night massage SECVPF
முகப் பராமரிப்பு

அடர்த்தியான புருவத்திற்கு இரவில் செய்ய வேண்டிய மசாஜ்

அடர்த்தியான புருவம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இரவில் கீழே உள்ள மசாஜ் முறைகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

அடர்த்தியான புருவத்திற்கு இரவில் செய்ய வேண்டிய மசாஜ்

புருவங்கள் அழகாய் இருந்தால் வசீகரமாக இருக்கும் . சிலருக்கு பெரிய கண்கள் இருக்கும். புருவமே இருக்காது. பென்சில், மை போன்றவற்றால் அடர்த்தி செய்து கொள்வார்கள். இது நிரந்தர தீர்வாகாது. புருவங்கள் உங்களால் அடர்த்தியாக மாற்ற முடியும். அதற்கு சின்ன விஷயங்கள் செய்தால் போதும் சில வாரங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.

எப்போதும் இரவுகளில் முடி வளர்ச்சி அதிகரிக்கும். ஆகவே இரவுகளில் புருவத்தை மசாஜ் செய்து எண்ணெய் தடவினால் விரைவில் பலனளிக்கும். இந்த குறிப்புகளை செய்வதற்கு முன் புருவ முடிகளை லேசாக கிள்ளி விடுங்கள். இதனால் வேர்கால்கள் தூண்டப்பட்டு, புருவம் வளர உதவும். அதன் பின் கீழே உள்ள குறிப்புகளை செய்து பாருங்கள்.

வெங்காயத்தில் சல்ஃபர் அதிகமாக உள்ளது. சொட்டையான புருவத்திலும் முடி வளரச்செய்யும். இரவு தூங்குவதற்கு முன், புருவத்தை லேசாக கிள்ளி விட்டு, சின்ன வெங்காய சாறை சிறிது எடுத்து ஒரு பஞ்சில் நனைத்து புருவத்தில் தடவுங்கள். காலையில் கழுவுங்கள்.

எலுமிச்சை துண்டை உங்கள் புருவத்தின் மீது வைத்து சில நிமிடங்கள் அப்படியே இருக்கவும். பின்னர் அதன் சாற்றினை தடவி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து புருவத்தில் தடவி வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும். தினமும் தடவி வந்தால், ஒரே வாரத்தில் மாற்றம் காண்பீர்கள்.

விளக்கெண்ணெய் மற்றும் நல்லென்ணெய் சம அளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை இரவில் தடவி அதன் மேல் ஐ ப்ரோ பென்சிலால் வரைந்தால், சில வாரங்களில் வரைந்த மாதிரியே புருவங்கள் அடர்த்தியாக கிடைக்கும்.201609301031114287 Thick eyebrows to be done at night massage SECVPF

Related posts

பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…!

nathan

முக வசீகரம் பெற

nathan

மூக்கின் மீது உள்ள கரும்புள்ளிகளை விரட்டியடிக்கும் ஒரு ஒரு இயற்கை பொருள்!

nathan

கண்களில் கருவளையம் மறைய…

nathan

தெரிஞ்சிக்கங்க…சாதாரண சருமம் உள்ளவர்களுக்கான பேஸ் பேக்

nathan

முகப்பருவிலிருந்து விடுதலை பெற……

nathan

முகப்பருக்களை விரட்டும் தக்காளியின் மகிமை!

nathan

இளமையூட்டும் கடலை மா

nathan

உங்களுக்கு தெரியுமா இயற்கையான முறையின் மூலம் கண் கருவளையத்தை போக்க!

nathan