26.2 C
Chennai
Thursday, Dec 26, 2024
7 10 1465557700
கால்கள் பராமரிப்பு

பாதங்களில் சுருக்கங்கள், வெடிப்பு போக வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க

பாதங்கள் அழகாய் இருந்தால் பெண்களின் அழகு இன்னும் கூடுதல். பாதங்கள்தானே யார் பார்க்கிறார்கள் என்று முகம், கை மட்டும் அழகுப்படுத்திக் கொள்பவர்கள் நிறைய உண்டு.

ஆனால் பாதங்களில் சுருக்கம் விழுந்து வெடிப்புகளோடு வறண்டு இருந்தால் நம் மீதிருந்த மதிப்பே சுவடு தெரியாமல் போய் விடும். எதிலேயும் மேலோட்டமாக இருக்காதீர்கள். பாதங்களையும் கவனியுங்கள். அழகு மட்டுமில்லாமல் பாதத்தின் மூலம் வரும் தொற்றுக்களையும் தடுக்கலாம்.

பாதத்தினை எவ்வாறு பராமரிக்கலாம் என பார்க்கலாம்.

வாரம் ஒரு முறை சுடு நீரில் மஞ்சள், சமையல் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அந்த நீரில் கால்களை நனையுங்கள். 15 நிமிடங்கள் கழித்து பாதங்களை மசாஜ் செய்யுங்கள். இது பாத நகங்களின் இருக்கும் அழுக்குகளை நீக்க உதவியாக இருக்கும்.

எண்ணெய் : தினமும் ஆலிவ், பாதாம் அல்லது தேங்காய் எண்ணெயை இரவில் தூங்குவதற்கு முன் பாதங்களில் தடவிவிட்டு செல்லுங்கள். இது பாதத்தில் ஏற்படும் வறட்சியை போக்கும். வறட்சியினால்தான் பாதங்களில் சுருக்கங்கள் ஏற்படும்.

ஷீயா பட்டர் : ஷீயா பட்டரை பாதங்களில் தேய்த்து வட்ட வடிவில் மசாஜ் செய்யலாம். ஒரு வாரத்தில் உங்கள் பாதங்கள் பஞ்சு போன்று மென்மையாகவும், மெருகேறியும் இருக்கும்.

விட்டமின் ஈ : விட்டமின் ஈ சரும சுருக்கங்களைப் போக்கும். விட்டமின் ஈ நிறைந்த ஆரஞ்சு எண்ணெயை பாதங்களில் தடவி வந்தால் சுருக்கங்கள் போய், கருமை மறைந்து தங்க நிறத்தில் மினுமினுக்கும்.

பப்பாளி பேக் : 15 நாட்களுக்கு ஒருமுறை பப்பாளி, அன்னாசி பழங்களின் சதைப்பகுதியை எடுத்து அதனுடன் தேன் கலந்து,பாதங்களில் மசாஜ் செய்தால், பாதங்களில் வெடிப்புகள் தோன்றாது.

அவகாடோ : அவகாடோவின் சதைப் பகுதியை எடுத்து, அதில் ஆலிவ் எண்ணெய் கலந்து பாதம் மற்றும் கால்களில் தேய்த்து வந்தால், வறட்சி போய், சுருக்கங்கள் குறைந்துவிடும்.

பாத வெடிப்புகள் நீங்க : வெள்ளை மெழுவர்த்தியில் உள்ள மெழுகினை எடுத்துக் கொள்ளுங்கள். விளக்கெண்ணெயை சூடுபடுத்தி, அதில் இந்த மெழுகினைப் போடுங்கள்.

அடுப்பை குறைந்த தீயிலேயே வைக்க வேண்டும். மெழுகு முழுவதும் கரையும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். ஆறியதும் கெட்டியாக கையில் எடுக்கும் பதத்தில் இருக்கும்.

இந்த கலவையை தினமும் கால்களின் பூசி வாருங்கள். ஒரே வாரத்தில் கால்கள் மெத்தென்று ஆகிவிடும். வெடிப்பு இருந்த இடமே தெரியாது.

7 10 1465557700

Related posts

மிருதுவான பாதங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்..!!இத படிங்க!

nathan

பெடிக்கியூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!….

sangika

வேப்பிலை பயன்படுத்தி எப்படி குதிகால் வெடிப்பை குணப்படுத்த முடியும்?

nathan

கால், கை முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

உங்க பாதமும் இப்படி வெடிச்சிருக்கா? அப்ப இத படிங்க!

nathan

உங்க கால் விரல் நகம் இப்படி அசிங்கமா இருக்கா?அப்போ கட்டாயம் இத படிங்க!

nathan

குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட எளிய வழி..!

nathan

ஹை ஹீல்ஸ் உபயோகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் முதுகு தண்டு தேய்மானம்

nathan

பாதங்களையும் கொஞ்சம் பாருங்க!

nathan