27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
5 10 1465538519
சரும பராமரிப்பு

சருமத்தின் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் மஞ்சள் பேக் ட்ரை பண்ணியிருக்கீங்களா?

பெண்களுக்கு முகத்தை பளிச்சென்று சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென விருப்பம்தான். ஆனால் முகப்பரு, எண்ணெய் வடிதல், கரும்புள்ளி ஆகியவை நம்மை கேட்டுக் கொண்டா வருகிறது.

சிலருக்கு சருமத்தின் அடியில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் இயற்கையாகவே அதிகமாய் சுரக்கும். இதனால் எப்போதும் எண்ணெய் வடிந்து கொண்டு, முகப்பருவை வரவேற்கத் தொடங்கிவிடும்.

அதுமட்டுமில்லாமல் எளிதில் அழுக்கு படிந்து, சருமம் கடினத்தன்மையாய் மாறிவிடும். இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

இந்த குறிப்பில் சொல்வது படி, நீங்கள் மஞ்சள் பேக் வாரம் ஒருமுறை உபயோகித்தால், எண்ணெய் வழியாது, முகப்பருக்களுக்கு தடா போட்டுவிடும். சுருக்கங்கள் நீங்கி விடும். கண்களில் உண்டாகும் கருவளையம் மறைந்துவிடும்.

முகம் பளபளப்பாக மின்னும். முகம் தேஜசாக மிளிர, நம்மால் வாரம் ஒரு நாள், வெறும் 15 நிமிடங்கள் செலவழிக்க முடியாதா என்ன..

மஞ்சள் பேக் செய்ய தேவையானவை : எப்போது கடைகளில் மஞ்சள் பொடியை வாங்கி உபயோகிக்க வேண்டாம். அதில் ரசாயனம் இருப்பதால் அவற்றை உபயோகித்தால் சருமத்திற்கு நல்லதல்ல.

மஞ்சள் கிழங்கு வாங்கி பொடி செய்து வைத்துக் கொள்லுங்கள். இது சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. அதேபோல் தேனையும் ஒரிஜினலா என பரிசோதித்து உபயோகபபடுத்துங்கள்.

மஞ்சள் பொடி – 3 டீ ஸ்பூன் யோகார்ட் – ட் டேபிள் ஸ்பூன் தேன் – 1 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 1 டீ ஸ்பூன்

முதலில் யோகார்ட்டை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து நன்றாக கலக்கி பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். பின்னர் தேன் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, அதில் மஞ்சள் 2 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்போது மஞ்சள் மாஸ்க் தயார். இதனை கண்களை தவிர்த்து முகம் முழுவதும் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

வாரம் ஒரு முறை இதுபோல் செய்யவும். முகம் மிளிரும். முகப்பரு, மாசு, கருமை ஆகியவை நீங்கி முகம் பொலிவாக இருக்கும். நீங்களும் வீட்டில் முயன்று பாருங்கள்.

5 10 1465538519

Related posts

எந்த வகை சருமத்தினர் எலுமிச்சையை எந்த முறையில் பயன்படுத்தலாம்

nathan

அழகை அதிகரிக்க ஐஸ் கட்டி ஃபேஷியல் பண்ணுங்க

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஹீரோ மாதிரி நீங்க அழகாகவும் நல்ல கவர்ச்சியான சருமத்தை பெறவும் என்ன செய்யணும் தெரியுமா?

nathan

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது!…தெரிந்துகொள்வோமா?

nathan

ஆண்களின் தோற்றத்தை மேன்மேலும் அதிகரித்து வெளிக்காட்டும் அன்றாட பழக்கவழக்கங்கள்!தெரிந்துகொள்வோமா?

nathan

கவர்ச்சியான தோற்றத்திற்கு சில சூப்பர் டிப்ஸ்!!!

nathan

கோடையில் பெண்களின் சரும பராமரிப்பிற்கு உதவும் 4 வழிகள்

nathan

அழகை கெடுப்பது போலிருக்கும் மச்சத்தை நீக்க வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்

nathan

அழகியல் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றான சருமப் பிரச்சினை!..

sangika