24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
201609271018474964 kadalai maavu face pack help skin beauty besan flour face SECVPF
சரும பராமரிப்பு

சருமத்திற்கு இளமையூட்டும் கடலை மாவு

அழகை பேணிக் காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலை மாவு. கடலை மாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும்.

சருமத்திற்கு இளமையூட்டும் கடலை மாவு
தினமும் கடலைமாவை பயன்படுத்தி வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை கீழே பார்க்கலாம்.

* இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும்.

* அதேபோல் குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.
இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில்பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும், இளமையோடு காட்சி தரும்.

* 1 டீஸ்பூன் கடலை மாவை ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் ‘பேக் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் படிப்படியாக மறைந்து போகும்.

* தோலுடன் இருக்கும் கடலை பருப்பு அரை கிலோ, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சைசாறு சேர்த்து முகத்துக்கு ‘பேக்’ போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.201609271018474964 kadalai maavu face pack help skin beauty besan flour face SECVPF

Related posts

வாழ்க்கையை மாற்றும் தேங்காய் எண்ணெயின் பயன்கள்!!!

nathan

முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்கான இயற்கை முகப் பராமரிப்பு

sangika

வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே!

nathan

இடுப்பு, கழுத்து, அக்குள்… கருமை நீங்க அருமையான வழிகள்!

nathan

பெண்கள் ஏன் காலில் கருப்புக் கயிறு அணிகிறார்கள் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

அழகை அதிகரிக்க ஓட்ஸை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

nathan

தினமும் 10 நிமிடம் செலவழித்தாலே போதும், சருமமானது அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்……

sangika

அழகுக்கு ஆயுர்வேதம்

nathan

குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan