தோலில் கொஞ்சம்கூட சுருக்கமே இல்லாமல்…
ஆயில் மசாஜ்: பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து உடம்பு முழுவதும் தடவி மூன்று மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள். வாரம் ஒருமுறை இப்படிச்செய்துவர, சருமத்தில் சுருக்கமா… மூச்!
தாடைப்பகுதியில் சதை எப்படி சரி செய்வது?
இதற்கு ஒரே வழி இதற்கான எக்ஸர்ஸைஸ்தான். காரணம் கிரீம், லோஷன் போன்றவற்றைப் பயன்படுத்தி மசாஜ் செய்தாலோ, லேசாக ரப் செய்தாலோ, இளவயதில் சருமத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால் புஜங்காசனம், வக்ராசனம், அர்த்தமத்தேந்திராசனம் போன்ற ஆசனங்களைச் செய்து வாருங்கள். இவை டபிள் சின்னை சரியாக்கும். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து எக்ஸ்ட்ரா தசையுள்ள தாடைப் பகுதியில் அப்ளை செய்து 20 நிமிடங்களில் கழுவினாலும். ஸ்கின் டைட் ஆகும். இதை வாரத்தில் ஒரு நாள் மட்டும் செய்யலாம்.
பெரியவர்களுக்கு இந்த டபுள்சின் பிரச்னை பெரும்பாலும், பரம்பரை காரணமாகவோ, அதிக உடல் எடையினாலோ ஏற்படும். ஃபேபியல் மசாஜ் செய்து கொள்வதாலும் டபுள்சின் உள்ள இடத்தில் கொழுப்பு கரைந்து அழகாகும். முக்கியமாக கீழே பார்த்து நடப்பவர்கள், குனிந்தே வேலை செய்பவர்களுக்கு டபுள்சின் ஏற்படும்.
பிரம்மமுத்திரா போன்ற கழுத்துக்கான ஆசனங்கள் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்தாலும் இந்தப் பிரச்னை தீரும்! குறிப்பாக யோகாசனங்களை அதற்குரிய ஆசிரியரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்!
கடைகளில் ஃபேட் பஸ்டர் கிரீம்கள் என்று நிறைய கிடைக்கிறது. இந்தக் கிரீம்களை கொழுப்புள்ள இடங்களில் தடவி மசாஜ் செய்யலாம். இருந்தாலும் ஓவராக உபயோகித்தால் தசைகள் லூசாகிவிடும் ஆபத்தும் இருக்கிறது. அதனால் இதில் கவனம் தேவை. சிலருக்கு கழுத்துப் பெரியதாக முன்னே தள்ளி இருப்பது போல் காணப்படும் அவர்கள் தைராய்டு (Thyroid) டெஸ்ட் எடுத்துக் கொள்வது நல்லது.
கறுத்துப்போன முழங்கையை எப்படி பளிச்சாக்குவது?
நாற்காலியில் ஒரே பொசிஜனில் உட்கார்ந்திருந்தால் முட்டிகள் உராய்ந்து கறுத்துப் போகும். நாற்காலியில் வியர்வை படாமல் பார்த்துக் கொண்டாலும், முட்டி கறுப்பாகாது. நாற்காலியின் கைப்பிடிகளின் மீது டவலையோ அல்லது வெல்வெட் துணியையோ போட்டும் உட்காரலாம். இதனால் கை முட்டி உராயாமல் இருக்கும்.
முட்டியின் கறுப்பு நிறத்தை அகற்ற, ஆரஞ்சுத் தோல் பவுடர் கடைகளில் கிடைக்கிறது. 4 டீஸ்பூன் ஆரஞ்சுத் தோல் பவுடரை, 4 டீஸ்பூன் பாலில் ஊறவைத்து கலந்து கொண்டு முட்டியில் பூசி லேசாகத் தேய்த்துவிட்டு, 10 நிமிடங்களுக்குப்பின் தண்ணீரில் கழுவிவிடலாம். மாய்ச்சுரைசர் கிரீம்கள், வாசலைன் (Vaseline) மாதிரியான கிரீம்களை அப்ளை செய்வதாலும் முட்டியின் கறுத்த நிறம் போய்விடும்.