28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
thipp
​பொதுவானவை

சளி, இருமலுக்கு மருந்தாகும் திப்பிலி ஸ்பெஷல் ரசம்

தேவையான பொருட்கள் :
கண்டந்திப்பிலி – 10 கிராம்
சீரகம் – 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் – 2
புளி – சிறிய எலுமிச்சம் பழ அளவு
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
நெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
* வாணலியில் கண்டந்திப்பிலி, சீரகம், துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் போன்றவைகளை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள்.
* புளியை கரைத்து பாத்திரத்தில் கொட்டி கொதிக்கவிடுங்கள். நன்கு கொதிக்கும்போது அரைத்து வைத்துள்ள பொடியைகொட்டி, லேசாக கொதிக்க விடுங்கள்.
* கடைசியாக தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து கொட்டுங்கள்.
* கண்டந்திப்பிலி உடல் வலியை போக்கக்கூடியது. சளி, இருமலுக்கு நல்ல மருந்து. பிரசவித்த பெண்கள் இந்த ரசத்தை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட வேண்டும். உடல்வலி நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.thipp

Related posts

சாம்பார் வைப்பது எப்படி? சமையல் சந்தேகங்கள்

nathan

கோபமாக இருக்கும் கணவரை சமாதானப்படுத்துவதற்கான வழிகள்

nathan

சூப்பரான பூசணிக்காய் கறி

nathan

எளிமையான மிளகு ரசம்

nathan

குழந்தை வளர்ப்பில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பங்குண்டு

nathan

ஆப்பிள் ரசம்

nathan

சுவை மிகுந்த காளான் மசாலா

nathan

காலா சன்னா மசாலா

nathan

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்

nathan