கூந்தல் வளர நிறைய முயற்சி செய்திருப்போம். ஆனால் என்ன காரணம் என்றே தெரியவில்லை. முடி அடர்த்தி இல்லை, முடி உதிர்தல் அதிகமாக இருக்கிறது என கவலைப்படுகிறீர்களா? கீழே சொல்லியிருக்கிற ஏதாவது ஒரு காரணம் உங்கள் கூந்தல் வளராமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்.
மன அழுத்தம் : மன அழுத்தம் முடி வளர்ச்சியைதான் முதலில் பாதிக்கும் என உலகம் முழுவதும் இருக்கக்கூடிய கூந்தல் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒருமித்த குரலில் சொல்கிறார்கள். ஆகவே மன அழுத்தத்திலிருந்து விடுபட தேவையானவற்றை நீங்கள் செய்ய வேண்டும்.
மோசமான உணவுபழக்கம் : நாம் உண்ணும் உணவிற்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் முக்கிய தொடர்பு உள்ளது. உடலில் சத்து இல்லாத போது முதலில் உதிர்வது கூந்தல்தான். அதுவும் புரோட்டின் அதிகம் உள்ள உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். முடி வளரத் தேவையான அமினோ அமிலங்களை நாம் சாப்பிடும் உணவுகளிலிருந்தான் வேர்க்கால்கள் பெற்றாக வேண்டும்.
முடி அலங்காரத்திற்கு பயன்படுத்தும் உபகரணங்கள்: ஒருவர் உபயோகப்படுத்திய சீப்பினை மற்றவர் உபயோகித்தால், பொடுகு, மற்றும் கிருமிகளின் தொற்று விரைவில் வரும். மேலும், ஹேர் ட்ரையர் உபயோகப்படுத்தவே கூடாது. இது அதிகப்படியான வெப்பத்தை கூந்தலுக்கு தருவதால், முடி வேகமாக உதிரும். அதேபோல் உபயோகப்படுத்தும் ஹேர் கலரிங் கெமிக்கல் கலந்தவைகளாக இருக்கும்போது,. முடி வேகமாக உதிரும். சருமத்திற்கும் பாதிப்பினை தரும்.
குளோரின் நீர் : நீரில் அதிகப்படியான குளோரின் கல்ந்திருந்தால், ரசாயனத்தின் வீரியம் தாங்காது, வேர்க்கால்கள் பலமிழந்து, முடி உதிர்தல் ஏற்படும். ஆகவே குளோரின் கலந்த நீரில் தலைக்கு குளிப்பதை தவிர்த்திடுங்கள் அல்லது தவிர்க்க முடியாத பட்சத்தில் குளித்தபின் கடைசியில் மினரல் நீரில் தலையை அலசிவிட வேண்டும்.
இறுக்கமான சிகை அலங்காரம் : தலைமுடியை இறுக்கமாக சடையினால் அல்லது வேறு அலங்காரங்கள் செய்தால், வேர்கால்கள் எளிதில் பலமிழக்கும். இதனால் வேகமாக முடி உதிர்தல் ஏற்படும். அதே போல், முன் நெற்றியில் சொட்டை ஏற்படுவதற்கு காரணம் இறுக்கமாக சடை போடுவதே காரணம்.
ஈரமாக இருக்கும்போது தலை வாருதல் : தலைக்கு குளித்தபின், வேர்கால்கள் மிகவும் பலமில்லாமல் இருக்கும். அந்த சமயங்களில் சீப்பினை கொண்டு தலை வாரினால், முடி உதிர்ந்து அடர்த்தி குறைந்துவிடும்.
அடிக்கடி தலைக்கு குளிப்பது : அடிக்கடி தலைக்கு குளிப்பதும் அதிகப்படியான ஷாம்பு உபயோகப்படுத்துவதும் மிகவும் தவறு. இவை கூந்தலுக்கு அதிகப்படியான வறட்சியை தந்து உதிர்தலுக்கு காரணமாகிவிடும்.