29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?

ld785*  வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு  தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

*  கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து  காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது  நிற்கும்.

*  வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின்  தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

*  கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி  தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

*  நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

*  ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி  ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

*  காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி  தேய்த்துவர முடி கருமையாகும்.

*  அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து  கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

*  மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு  தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

இவையனைத்தையும் செஞ்சுப்பாருங்க! பூரிச்சுப் போவிங்க!!

Related posts

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும்…..

sangika

நரைமுடியை உடனே போக்க பிளாக் டீயும் உப்பும் போதுங்க… இத படிங்க!

nathan

வழுக்கை விழுகிறதா? – இதோ சில யோசனைகள்

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை கண்டிஷனர்

nathan

கூந்தலுக்கு ஹேர் கலரிங் செய்யும் போது கவனிக்க வேண்டிவை

nathan

முடி உ‌திர‌க் காரண‌ம் எ‌ன்ன ?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…துர்நாற்றம் வீசும் கூந்தலை மணக்க செய்ய சில டிப்ஸ்!!!

nathan

முடி உதிர்தல் பிரச்சனையா? வாரம் ஒரு முறை இதை பயன்படுத்துங்க

nathan

தலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா? இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

nathan