32.7 C
Chennai
Sunday, Feb 23, 2025
sl3868
சிற்றுண்டி வகைகள்

சிவப்பு அரிசி நட்ஸ் புட்டு

என்னென்ன தேவை?

சிவப்பு புட்டு அரிசி – 100 கிராம் (இந்த சிவப்பு புட்டு அரிசி சிறிது விலை அதிகம் இருப்பினும் மிக மிக சத்து வாய்ந்தது),
பருப்பு வகைகள் தலா – 6(பாதாம், பிஸ்தா, முந்திரி),
சாரை பருப்பு – ¼ டீஸ்பூன்,
ஏலப்பொடி – ¼ கால் டீஸ்பூன்,
ஜாதிக்காய் பொடி – ¼ டீஸ்பூன்,
நெய் – தேவைக்கு.
தேங்காய் துருவல் – ¼ கப்,
சர்க்கரை கால் முதல் அரை கப்,
உப்பு – ஒரு சிட்டிகை,
அலங்கரிக்க – டூட்டி புரூட்டி சிறிது.

எப்படிச் செய்வது?

சிவப்பு அரிசியை ஊற வைத்து உலர்த்தி மாவாக்கவும். பின் மாவை வறுத்து வைக்கவும். கடாயில் சிறிது நெய் விட்டு பருப்புகளை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். சிறிது உப்பை தண்ணீரில் கலந்து மாவில் தெளித்து கலக்கவும். ரவை மாதிரி கட்டியில்லாமல் இட்லிக் கொப்பரையில் ஆவியில் மாவை வேகவைக்கவும். வெந்தபின் மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நெய், சர்க்கரை, ஏலப்பொடி, ஜாதிக்காய் பொடி, வறுத்த பருப்புகள், தேங்காய் துருவல், டூட்டி புரூட்டி கலந்து அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

குறிப்பு: இந்த புட்டு அரிசி கிடைக்காவிட்டால் நல்ல பொன்னி பச்சரிசி மாவை வறுத்தும் செய்யலாம். கைக்குத்தல் அரிசி கிடைத்தால் இன்னும் விசேஷம். இந்த சிவப்பு அரிசி புட்டு குழந்தைகள், வயது வந்த பெண்களுக்கு தேவையான சத்துகள், புரதங்கள் கிடைக்கும்.sl3868

Related posts

வாழைப்பழம் கோதுமை தோசை

nathan

அசால்ட்டாக செய்யலாம் அதிரசம்!

nathan

சுவையான பிரெட் - அவல் சப்பாத்தி

nathan

மரவள்ளிக்கிழங்கு வடை

nathan

பிரெட் ஸ்விஸ் ரோல்

nathan

தக்காளி பஜ்ஜி

nathan

கொத்து ரொட்டி

nathan

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சோள ரவை கொழுக்கட்டை

nathan

சவ்சவ் கட்லெட்

nathan