இன்றைய தலைமுறை ஆண்களுக்கு சீக்கிரமே வழுக்கை விழுந்துவிடுகிறது. இதற்கு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் முக்கிய காரணம். மேலும் சில ஆண்கள் தங்கள் தலைமுடிக்கு ஆரம்பத்தில் இருந்தே சரியான பராமரிப்பு கொடுக்காமல், தலைமுடி ஆரோக்கியத்தை இழந்து உதிரத் தொடங்கும் போது, தலைமுடி மீது அக்கறை காண்பிப்பார்கள்.
ஆண்களின் அழகை அதிகரித்துக் காண்பிப்பதில் அவர்களது தலைமுடியும் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே ஒவ்வொரு ஆண்களும் தங்களது தலைமுடிக்கு சற்றும் தளராமல் பராமரிப்புக்களைக் கொடுத்து வர வேண்டும்.
இங்கு தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஆண்கள் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஹேர் ஸ்டைலிங் பொருட்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கடைகளில் விலைக் குறைவில் கிடைக்கும் தரமற்ற ஹேர் ஸ்டைலிங் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் ஒவ்வொரு முறை தலைமுடியை அலசும் போதும், கையில் கொத்தாக தலைமுடியைப் பெற வேண்டி வரும்.
தலைக்கு எண்ணெய் வைக்கவும் தலைமுடிக்கு எண்ணெய் ஊட்டமளிக்கும். அதற்கு வாரத்திற்கு 2-3 முறை தவறாமல் எண்ணெய் வைத்து வர வேண்டும். மேலும் எண்ணெய் தான் தலைமுடி வறட்சியடையாமல் வலிமையுடன் இருக்க உதவும். முக்கியமாக எண்ணெய் வைக்கும் போது எண்ணெய் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவ வேண்டும்.
நல்ல சிகையலங்கார நிபுணர் நல்ல சிகையலங்கார நிபுணர் உங்களது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்ட உதவுவார். எனவே உங்களுக்கு என்று ஒரு நல்ல சிகையலங்கார நிபுணரை தேர்ந்தெடுத்து, அவர்களது பரிந்துரையின் பேரின் சிறப்பான ஹேர் ஸ்டைலைப் பின்பற்றுங்கள்.
சீப்பிற்கு ‘குட்-பை’ சொல்லுங்கள் ஆண்களுக்கு அவர்களது கைவிரல்களே போதும் சீப்பு என்பதே தேவையில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு சீப்பை உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்துகிறீர்களோ, உங்கள் தலைமுடி அவ்வளவு பாதிப்பிற்குள்ளாகும். எனவே சீப்பை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்து, முடிந்த வரையில் உங்கள் கைகளால் தலைமுடியை சரிசெய்யுங்கள்.
கண்டிஷனர் பயன்படுத்தவும் மற்றும் தலைமுடியை தினமும் அலசவும் ஆண்கள் தலைக்கு குளிக்கும் போது கண்டிஷனர் பயன்படுத்துவது, அவர்களது தலைமுடியின் மென்மையை மேம்படுத்தும். முக்கியமாக கண்டிஷனரை தினமும் பயன்படுத்தக்கூடாது, வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் போதுமானது. அதேப் போல் தினமும் ஆண்கள் தங்களது தலைமுடியை அலசுவது, அவர்களது ஸ்கால்ப்பில் உள்ள அழுக்கை நீக்கி, ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
அதிகமான ஹேர் ஸ்டைல் பொருட்கள் தலைமுடிக்கு அளவுக்கு அதிகமாக ஹேர் ஜெல் போன்ற ஹேர் ஸ்டைலிங் பொருட்களைப் பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்களால் தலைமுடி ஆரோக்கியத்தை இழந்து உதிர ஆரம்பித்துவிடும். பின் அதைத் தடுப்பது என்பது கடினமான ஒன்றாகிவிடும். எனவே இப்பழக்கத்தை உடனே தவிர்க்க வேண்டும்.
சோப்புகள் சில ஆண்கள் ஷாம்பு இல்லாவிட்டால், சோப்புக்களைப் பயன்படுத்துவார்கள். இப்படி சோப்புக்களைப் பயன்படுத்தினால், தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெய் முழுவதுமாக நீக்கப்பட்டு, தலைமுடி மென்மையிழந்து, வறட்சியுடனும், பொலிவிழந்தும் காணப்படும்.
ஹேர் ட்ரையர் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்று தலைமுடியை வேகமாக உலரச் செய்வதற்கு, ஹேர் ட்ரையர் பயன்படுத்துபவர்கள் என்றால், முதலில் அதை நிறுத்துங்கள். ஏனெனில் ஆண்கள் தலைமுடி உலர்வதற்கு ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தினால், ஸ்கால்ப் அதிகமாக வெப்பமடைந்து, மயிர்கால்கள் வலிமையிழந்து உடைவதோடு, உதிர ஆரம்பித்துவிடும்.
அதிகமாக புகைப்பிடிப்பது ஆண்கள் தங்களது டென்சனைக் குறைப்பதற்கு புகைப்பிடிப்பார்கள். ஆனால் இப்படி புகைப்பிடிப்பதால் உடல்நலம் பாதிப்பதற்கு முன், தலைமுடி தான் முதலில் பாதிக்கப்பட்டு, உதிர ஆரம்பிக்கும். எனவே தலைமுடி உதிர்கிறது என்றால் புகைப்பிடிப்பதை முதலில் நிறுத்துங்கள்.
சுடுநீரில் அலசுவது அளவுக்கு அதிகமான சூடு எப்போதுமே தீங்கை தான் விளைவிக்கும். எனவே எப்போதும் தலைமுடிக்கு மிகவும் சூடான நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, வெதுவெதுப்பான நிலையிலான நீரைப் பயன்படுத்துங்கள்.