25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
1 copy 07 1465277277
உதடு பராமரிப்பு

சிவப்பான உதடுகளுக்கு உத்திரவாதம் தரும் உங்க வீட்டு சமையல் பொருட்கள்

சிவப்பாய் இருந்தால் அழகாய் இருக்கும் என உதடுகளுக்கு தினமும் லிப்ஸ்டிக் போட்டு, நல்லா இருந்த உதடுகள் நாளடைவில் கருமையாகிவிட்டதே..உள்ளதும் போச்சே என புலம்புபவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த குறிப்பு உங்களுக்கேதான்.

நம் சமையலறையில் இருக்கும் சின்ன சின்ன பொருட்களே நம்மை உலக அழகிகளாக மாற்றச் செய்யும் மந்திரவாதிகள்தான்.

புகழில் இருக்கும் நிறைய மாடல் அழகிகள் கெமிக்கல் கலந்த அழகு சாதனங்களை உபயோகிப்பதில்லை, இயற்கையான வழிகளையே நாடுவதாக கூறுகிறார்கள். நாம் மட்டும் ஏன் விளம்பரங்களை நம்பி, ஏமாற வேண்டும்.

இங்கே உங்கள் கருமையடைந்த உதட்டினை சிவப்பாக்க எளிதான, சின்ன சின்ன குறிப்புகள் உள்ளன. படித்து பயன் பெறுங்கள்.

புதினா : புதினா ஒரு இயற்கையான ப்ளீச். உதட்டில் ஏற்படும் விடாப்படியான கருமையை போக்கிவிடும். புதினாவுடன், கொத்தமல்லி இலையை அரைத்து இரவு தூங்குவதற்கு முன் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.

கடுகு : கடுகினை பொடி செய்து அதனுடன், சில துளி எலுமிச்சை சாறு, கிளசரின் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து உதட்டில் தடவினால் எப்படிப்பட்ட கருமையும் மறைந்து உதடு சிவந்த நிறத்திற்கு மாறும்.

வெண்ணெய் : அதே போல் உதடுகளை மிருதுவாக்கக்கூடிய வெண்ணை தடவினாலும் உதட்டில் ஏற்படும் வறட்சியை தவிர்க்கலாம். உதடுகளும் பளபளப்பாகும்.

பால் : தினமும் ஒரிரு முறை பால் ஆடையுடன் சிறிது தேன் கலந்து உதட்டில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடவும். இது உதடுகளில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி, பளிச்சிட வைக்கும்.

குங்குமப் பூ : குங்குமப் பூவினை நீரில் ஊற வைத்து, அந்த நீரில் வெண்ணெயை குழைத்து, பூசி வாருங்கள். நிச்சயம் அழகான உதடுகள் கிடைக்கும்.

பீட்ரூட் : நேரம் இருக்கும்போதெல்லாம் பீட்ரூட் மற்றும் மாதுளை சாறினை உதட்டில் தடவினால், உதடுகள் ஜொலிப்பது உறுதி.

தேங்காய் எண்ணையில் அரை டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் தடவி வந்தால் , உதடுகளில் ஏற்படும் வெடிப்பு மறைந்துவிடும். பளபளப்பாக காட்சி அளிக்கும்.

ஆலிவ் எண்ணெயுடன் சிறிது தேன் மெழுகு மற்றும் ரோஸ் வாட்டரை கலந்து உதட்டில் தடவுங்கள். உதட்டில் ஏற்படும், வெடிப்பு, சுருக்கங்கள் எல்லாம் போய் மிருதுவான சிவபழகுடைய உதடுகள் கிடைக்கும்.

பெட்ரோலியம் ஜெல்லியையும் உதட்டின் தினமும் பூசி வந்தால், கருமை மறைந்துவிடும்

1 copy 07 1465277277

Related posts

உதடு கருப்பாக உள்ளதா

nathan

உதடுக்கு லிப்ஸ்டிக் போடுவது எப்படி?

nathan

பளபள உதடுகள் பெற.

nathan

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய டிப்ஸ்

nathan

எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தினால் உதடு அழகு பாதிக்கப்படுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

உதட்டு வறட்சியை போக்கும் தேங்காய் எண்ணெய்

nathan

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய

nathan

லிப்ஸ்டிக் போடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

nathan

உதட்டுக்கு அழகு உடலுக்கு கேன்சர்!

nathan