26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 06 1465202711
சரும பராமரிப்பு

உங்கள் சருமத்தின் நிறத்தினை கூட்டச் செய்யும் 9 பொருட்கள்!

எல்லாருக்குமே மாசற்ற சருமம் மிகப் பிடித்ததே. வெயிலில் செல்வதனால் உண்டாகும் கருமையை போக்க திண்டாடுவார்கள். எளிதான மற்றும் குறைந்த நேரம் எடுத்துக் கொண்டால், எல்லாருமே இந்த விஷயத்தில் அக்கறை காட்டுவோம். அவ்வகையில் குறைவான நேரத்தில் உங்கள் சருமத்திற்கு நிறமளிக்கும் எளிய வழிகளை காண்போம்.

பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு : பால் பவுடர் ஒரு ஸ்பூன் எடுத்து, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும், தேன் சிறிது கலந்து முகத்தில் பேக் போல போடுங்கள். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளி, கருமை, முகப்பரு ஆகியவை மறந்து சருமத்திற்கு நிறம் கூடி, மினுமினுக்கும்.

ஓட்ஸ் மற்றும் தயிர் : முந்தைய இரவு தயிரில் ஓட்ஸ் ஊற வையுங்கள். மறு நாள் அதனுடன் மேலும் சிறிது தயிர் சேர்த்து, மிக்ஸியில் அரையுங்கள். இந்த கலவையை முகத்தில் போட்டு, பதினைந்து நிமிடம் காய வையுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவலாம். இவ்வாறு செய்து வந்தால், முகம் நிறம் பெறும்.

உருளைக் கிழங்கு : உருளைக் கிழங்கினை அரைத்து சாறெடுத்துக் கொள்ளுங்கள். இதனை முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தேய்த்து, காய்ந்ததும் கழுவலாம். இயற்கையாகவே உருளைக் கிழங்கு முகத்தில் ப்ளீச்சிங் செய்கிறது. ஆகவே நாளடைவில் சருமம் நிறம் பெறும்.

தக்காளி மற்றும் மஞ்சள் : தக்காளி சாறினை எடுத்து, அதில் அரை ஸ்பூன் மஞ்சள் சேருங்கள். இவற்றுடன் சில துளி தேன் சேர்த்து, முகத்தில் தடவுங்கள். இது சிறந்த முறையில் சருமத்தை சுத்தம் செய்யும். தக்காளி கருமையை போக்கும். நிறத்தினை தரும். மஞ்சள் கிருமிகளை விரட்டும். முகப்பருக்களை வரவிடாமல் தடுக்கும். தேன் சருமத்திற்கு ஈரப்பதம் தரும்.

பாதாம் : பாதாமை ஊற வைத்து, தோலை நீக்கி, சிறிது பால் அல்லது மோர் கலந்து நைஸாக அரைத்தக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் பேக்காக போட்டு, நன்றாக காய்ந்ததும் கழுவுங்கள். இது சருமத்தில் உள்ள சுருக்கங்களை அகற்றும்.

பாதாம் எண்ணெயை லேசாக சூடு படுத்தி, இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் நன்றாக தேயுங்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். நிறம் கூடும்.

கடலை மாவு : கடலை மாவில் சிறிது மோர் கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம். இது விரைவில் பலன் தரும். அந்த காலங்களில் இந்த எளிய வழியைத்தான் சருமத்திற்கு நிறம் கூட்ட பயன்படுத்தினார்கள்.

புதினா : புதினா சூர்ய கதிர்களால் உண்டாக்கும் பாதிப்பினை எதிர்க்கும். கருமையை அகற்றி, மிருதுத் தன்மையை தரும். புதிய புதினா தழைகளை அரைத்து, அதனை முகத்தில் தேய்க்கவும். 10- 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

வாழைப்பழம் : வாழைப்பழம் சருமத்திற்கு நிறம் அளிக்கும் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பழுத்த வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் புளித்த தயிர் கலந்து, முகத்தில் தேயுங்கள். காய்ந்த பின் குளிர்ந்த நீரினால் கழுவவும். இவ்வாறு வாரம் 3 முறை செய்து பாருங்கள். உங்கள் நிறம் அதிகரிப்பதை உணர்வீர்கள்.

சந்தனம் : சந்தனம் பாரம்பரியமாக நாம் உபயோகப்படுத்துகிறோம். இது சருமத்திற்கு நிறம் தரும் என்பதில் சந்தேகமேயில்லை. கடைகளில் வாங்கும் வில்லைகள் நல்லதில்லை. சந்தனக் கட்டையை உபயோகியுங்கள். சந்தன கட்டையில் நீர் விட்டு பேஸ்ட் போல் உரசி, அதனை முகத்தில் தினமும் தேய்த்து, காய்ந்ததும் கழுவினால், நாளடைவில் சருமத்திற்கு சந்தன நிறம் கூடும்.

மேலே சொன்னவை எளிதில் எல்லாராலும் செய்யக் கூடியதே. நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் சருமத்திடம் அக்கறை காட்டுங்கள். உங்கள் சருமம் உயிர் பெற்று ஆரோக்கியமாய் இருக்கும்.

2 06 1465202711

Related posts

மகத்துவமான மருதாணி:

nathan

முதுகு அழகு பெற…

nathan

மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பதை பார்க்கலாம்…..

sangika

ஆயுள் முழுக்க இளமையோடு ஜொலிக்க உதவும் அமிர்தப்பொடி… வீட்டில் எப்படி தயாரிப்பது..?இத படிங்க!

nathan

முகம் மற்றும் கை,கால்களில் ஏற்படும் கருமை அப்படியே திட்டுகளாக படிந்துவிடும்.

nathan

அழகு குறிப்புகள்:அழகு பலன்களை அள்ளித் தரும் வெட்டி வேர்

nathan

Baby oil பேபி ஆயில் சருமத்தில் செய்யும் அழகு மேஜிக்

nathan

என்னென்ன பொருள்களை ஷேவிங் கிரீமுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் !..

sangika

உங்களுக்கு தெரியுமா உச்சி முதல் பாதம் வரை அழகாக்க இந்த ஒரே பூ போதும்!

nathan