அதிக சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த நண்டு சூப்பை வாரம் இருமுறை குடித்தால் நிவாரணம் பெறலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சளி தொல்லையை போக்கும் நண்டு சூப்
தேவையான பொருட்கள் :
நண்டு – 2 பெரியது
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
மிளகு – 1 ஸ்பூன்
தக்காளி – 2
பெருங்காயத்தூள் – 1/4 டிஸ்பூன்
சோளமாவு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.
* நண்டின் கால்களை ஒடித்து அதன் மேல் பகுதியில் ஒரு தட்டுத் தட்டி மஞ்சள்தூள் போட்டுக் கழுவிக் கொள்ளுங்கள்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, தக்காளியை போட்டு வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்த பின் தக்காளி வெங்காயக் கலவையைப் போட்டு வதக்குங்கள்.
* நன்றாக வதக்கியதும் அதில் நண்டைப் போட்டுத் தேவையான நீர் விட்டு வேக வையுங்கள்.
* வெந்ததும் நண்டைத் தனியே எடுத்து உள்ளே இருக்கும் சதை பகுதியை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.
* கரைத்து வைத்துள்ள சோள மாவை கொதிக்கும் கலவையில் ஊற்றுங்கள்.
* கலவை ஒரு கொதி வந்ததும் நண்டின் சதை பகுதியை போட்டு இறக்கி சூடாகப் பரிமாறுங்கள்.
* சுவையான நண்டு சூப் ரெடி. இந்த சூப் சளி தொல்லை இருப்பவர்கள் குடிக்க மிகவும் உகந்தது.