24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்முகப்பரு

பரு தழும்புகள் முகத்தில் மறைய வேண்டுமா

Acne-scars-have-clear-natural-face-packபருக்களால் வந்த தழும்புகள் மறைய இயற்கை பேஸ் மாஸ்க் டீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். அந்த பருக்களால் வந்த தழும்புகள் மறைய கிரீம்களைப் பயன்படுத்துவதை விட இயற்கைப் பொருட்களைக் கொண்டு முயற்சித்தால், பருக்களும், அவற்றால் ஏற்பட்ட தழும்புகளும் மறைவதோடு, முகமும் நன்கு பொலிவோடு காணப்படும். இப்போது அந்த பருக்களையும், அதனால் ஏற்பட்ட கருமையான தழும்புகளையும் போக்கும் சில அழகுக் குறிப்புகளைப் பார்க்கலாம்..

 

வெந்தயக்கீரை பேஸ் பேக் : சிறிது வெந்தயக்கீரை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் படிப்படியாக தழும்புகள் மறைவதை காணலாம்.

வெந்தய பேஸ் பேக் : சிறிது வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, அவற்றை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்கு ஆறியதும், அதனை முகத்தில் தழும்புள்ள இடங்கள் மீது தடவுங்கள். மேலும் முகத்தைக் கழுவ இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக கழுவியப் பின்னர் துடைக்க வேண்டாம். அப்படியே காற்றினால் உலரவிடுங்கள்.

ஆலிவ் எண்ணெய் : ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை ஜெல் : கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

Related posts

மென்மையான கைகளை பெறுவதற்கு……

nathan

பெண்கள் அதிகமாக விரும்பும் செயற்கை நகைகள்!

nathan

உட்காரும் இடத்தில் பருக்கள் உண்டாக இவை தான் காரணம்!…

sangika

பரு

nathan

விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவதன் நன்மை, சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் விளக்கெண்ணெய்

nathan

கோடையில் பெண்களின் சரும பராமரிப்பிற்கு உதவும் 4 வழிகள்

nathan

மனைவி தன்னை ஏமாற்றியதாக பேசினாரா நடிகர் தனுஷ் !

nathan

அழகு குறிப்புகள்:மேனியை மெருகூட்ட!

nathan

நம்ப முடியலையே…நடிகை மீரா ஜாஸ்மினா இது?- படு குண்டாக இருந்த நடிகை இப்படி ஒல்லியாகிவிட்டாரே

nathan