25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201609101429265399 Sunday Special viral meen kulambu SECVPF
அசைவ வகைகள்

சன்டே ஸ்பெஷல் விரால் மீன் குழம்பு

சன்டே சிக்கம், மட்டன் சாப்பிட்டு சலித்து போனவர்கள் விரால் மீன் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சன்டே ஸ்பெஷல் விரால் மீன் குழம்பு
தேவையான பொருட்கள் :

விரால் மீன் – 500 கிராம்
சின்ன வெங்காயம் – 250 கிராம்
தக்காளி – 250 கிராம்
தேங்காய்ப்பால் – 2 கப்
பூண்டு – 1
கடுகு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
வெந்தயம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – அளவுக்கு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

* மீனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டக் கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்தமிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

* அடுத்து பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* அடுத்து அதில் தேங்காய்ப் பாலை விட்டு நன்கு கொதிக்கும் போது மீன் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்த பின் அடுப்பை மிதமான தீயில் 7 நிமிடம் வைத்து கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.

* சுவையான விரால் மீன் குழம்பு ரெடி.

குறிப்பு: எப்போதுமே விறால் மீன் வாங்கும்போது முக்கால் கிலோ அல்லது அதுக்கு மேல எடை இருக்கிற மாதிரி பார்த்து வாங்க வேண்டும். அதுக்கு கீழே எடை இருந்தா ருசியாகவே இருக்காது.201609101429265399 Sunday Special viral meen kulambu SECVPF

Related posts

காரைக்குடி மீன் குழம்பு

nathan

ஆந்திரா ஸ்பெஷல்: கோங்குரா சிக்கன் குழம்பு

nathan

வீட்டிலேயே செய்யக்கூடிய‌ சில்லி முட்டை.

nathan

சுவையான ஹரியாலி முட்டை கிரேவி

nathan

ஆ‌ட்டு‌க்க‌றி தொ‌க்கு

nathan

சுவையான வஞ்சிரம் மீன் கிரேவி

nathan

சூப்பரான ஸ்பைசி முட்டை மசாலா

nathan

சுவையான இறால் கிரேவி

nathan

தந்தூரி சிக்கன் பிரியாணி : செய்முறைகளுடன்…!

nathan