23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
sl3839
சைவம்

மஷ்ரூம் ராஜ்மா குருமா

என்னென்ன தேவை?

ராஜ்மா – 100 கிராம்,
மஷ்ரூம் – 4,
தக்காளி – 2,
புளிக்கரைசல் – 1/4 கப்,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள்தூள் -1 சிட்டிகை,
பூண்டு பல் – 3,
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
இஞ்சி – 1 சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 1,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
மல்லித்தழை – சிறிது.

எப்படிச் செய்வது?

ராஜ்மாவை 8 மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் உப்பு சேர்த்து வேக விடவும். கடாயில்எண்ணெய் விட்டு பூண்டை வதக்கி, சுத்தம் செய்து, நறுக்கிய மஷ்ரூமை வதக்கி, புளிக்கரைசல் ஊற்றி, உப்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். மஷ்ரூம் வெந்ததும் ராஜ்மாவையும் சேர்க்கவும். பின் சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்த்துருவல்,தக்காளி இவற்றை நைஸாக அரைத்து கொதிக்கும் கலவையில் ஊற்றவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் இறக்கி விடவும். மல்லித்தழை தூவி விடவும்.

குறிப்பு: வெங்காயத்திற்கு பதில் மஷ்ரூம் சேர்க்கப்பட்டுள்ளது.sl3839

Related posts

பஞ்சாப் உருளைக்கிழங்கு

nathan

பட்டாணி பன்னீர் கிரேவி

nathan

உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்

nathan

கொப்பரி பப்பு புளுசு

nathan

பன்னீர் பட்டாணி மசாலா

nathan

கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி

nathan

சிம்பிளான… தக்காளி சாம்பார்

nathan

பொரிச்ச குழம்பு பலாக்கொட்டை, முருங்கைக்காய்

nathan

காலிஃப்ளவர் 65

nathan