சுவையான சத்தான பாசிப்பருப்பு வெங்காய அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சுவையான சத்தான பாசிப்பருப்பு வெங்காய அடை
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு – ஒரு கப்,
பச்சரிசி – கால் கப்,
பச்சைமிளகாய் – 3
வெங்காயம் – 2
இஞ்சி – சிறு துண்டு,
கொத்தமல்லித்தழை – கால் கப்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
* இஞ்சி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசி, பாசிப்பருப்பு, பச்சரிசியை நன்றாகக் களைந்து 3 மணி நேரம் ஊற விடவும்.
* இதனுடன் ப.மிளகாய் சேர்த்து அடை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, கொத்தமல்லி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும். அத்துடன் உப்பு சேர்த்து கலக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் மேல் வெங்காயத்தை தூவி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான பாசிப்பருப்பு வெங்காய அடை ரெடி.