29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201609100921448969 aatu kudal kulambu Lamb Intestine curry SECVPF
அசைவ வகைகள்

வயிற்றுப்புண்ணை ஆற்றும் ஆட்டுக்குடல் குழம்பு

வயிற்றில் புண் இருப்பவர்கள் ஆட்டுக்குடலை சமையல் செய்து வாரம் இருமுறை சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வயிற்றுப்புண்ணை ஆற்றும் ஆட்டுக்குடல் குழம்பு
தேவையான பொருட்கள் :

சுத்தம் செய்த குடல் – 1
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தேங்காய்துருவல் – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 200 கிராம்
மிளகாய் தூள் – 3/4 தேக்கரண்டி
தனியா தூள் – 1/2 தேக்கரண்டி
சோம்பு, சீரக தூள் – 1 தேக்கரண்டி
பட்டை – 2 துண்டு
லவங்கம் – 2
ஏலம் – 1
சோம்பு – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குடலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* முதலில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் இவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, லவங்கம், ஏலம் போட்டு தாளித்த பின் அரிந்த பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய், தனியா, சோம்பு, சீரக பொடி, உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கிய பின்னர் சுத்தம் செய்த குடலையும் அதனுடன் சேர்த்து குக்கரை மூடி 11 விசில் விட்டு இறக்கவும்.

* தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது, ஏனெனில் குடல் தண்ணீர் விட்டு வேகும்.

* விசில் போனவுடன் குக்கரில் மூடியை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* வயிற்று புண் தீர்க்கும் குடல் குழம்பு ரெடி!201609100921448969 aatu kudal kulambu Lamb Intestine curry SECVPF

Related posts

முட்டை தோசை

nathan

சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு

nathan

சிக்கன் வறுவல்

nathan

சுவையான வறுத்தரைச்ச மட்டன் குழம்பு

nathan

நெத்திலி மீன் தொக்கு

nathan

பீர்க்கங்காய் முட்டை பொரியல்

nathan

சுவையான கோபி 65 செய்வது எப்படி

nathan

எப்படி சுறா புட்டு செய்வது?

nathan

சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு…

nathan