24.6 C
Chennai
Tuesday, Dec 24, 2024
201609091413300881 Nattu Kozhi pepper fry SECVPF
அசைவ வகைகள்

நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்

ளி தொல்லைக்கு நாட்டுகோழிக்கறி சூப் குடிக்கலாம். சூப் குடித்த பின்னர் இருக்கும் சிக்கனில் மிளகு போட்டு வறுவல் செய்து சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான்.

நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்
தேவையான பொருட்கள் :

நாட்டுக்கோழி – ஒரு கிலோ
பெரியவெங்காயம் – 3
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – இரண்டு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
மிளகுதூள் – 4 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நாட்டுக்கோழியை துண்டுகளாக வெட்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இதை தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 6 விசில் வரை விட்டு வேகவைக்கவும். நன்றாக வெந்தால் தான் சிக்கன் பஞ்சுபோல ஆகும்.

* விசில் போனவுடன் சிக்கனை எடுத்து விட்டு மீதமுள்ள தண்ணீரை சூப் போல குடிக்கலாம் சளி நீங்கும்.

* வெந்த சிக்கனை கை பொறுக்கும் சூட்டில் சின்ன சின்ன பீஸாக பிய்ந்து தட்டில் வைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். இத்துடன் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

* நன்றாக வதக்கிய உடன் காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும்.

* இதனுடன் சிக்கனைப் போட்டு நன்றாக கிளறி நன்றாக ப்ரை ஆகும் வரை வதக்கவும்.

* இப்போது சீரகத்தூள், பெப்பர் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

* தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

* சுவையான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வருவல் தயார்.

* இது மழைக்காலத்திற்கு ஏற்ற சூப்பரான சைடு டிஷ்.201609091413300881 Nattu Kozhi pepper fry SECVPF

Related posts

முனியாண்டி விலாஸ் கோழி குழம்பு / Muniyandi Vilas Chicken Curry

nathan

அரைக்கீரை கொத்துக்கறி மசாலா

nathan

இறால் வறுவல்: செய்முறைகளுடன்…!

nathan

சுவையான சம்பல் சிக்கன்

nathan

காடை வறுவல் செய்முறை விளக்கம்

nathan

சன்டே ஸ்பெஷல் விரால் மீன் குழம்பு

nathan

இறால் பெப்பர் ப்ரை செய்யும் முறை!!!

nathan

முட்டை சீஸ் ஆம்லெட்

nathan

காரசாரமான மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி

nathan