என்னென்ன தேவை?
புழுங்கலரிசி – 2 கப்,
பொட்டுக்கடலை மாவு – 1/2 கப்,
உப்பு தேவைக்கு,
பச்சைமிளகாய் – 8,
விருப்பப்பட்டால் பெருங்காயத்தூள்,
புளித்த தயிர் – 1/4 கப், வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 1/2 கப்,
ஊறிய வேர்க்கடலை,
கடலைப்பருப்பு – தலா 1 டேபிள் ஸ்பூன்,
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
புழுங்கலரிசியை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் வடித்து அத்துடன் பச்சைமிளகாய், தேங்காய்த் துருவல், பெருங்காயம், தயிர், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். அதில் கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய் சேர்த்து, ஊற வைத்து வடித்த வேர்க்கடலை, கடலைப்பருப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகள் செய்து தட்டைகளாகத் தட்டிக் கொள்ளுங்கள். மிதமான தீயில் எண்ணெயைக் காய வைத்து தட்டைகளாக பொரித்தெடுங்கள்.