29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201609060838353237 Simple natural methods to grow hair in place of fallen hair SECVPF
தலைமுடி சிகிச்சை

தலைமுடி உதிர்ந்த இடத்தில் முடி வளர எளிய இயற்கை வழிமுறைகள்

தலைமுடி உதிர்ந்த இடத்தில் முடி வளர எளிய இயற்கை வழிமுறைகள் என்னவென்று கீழே பார்க்கலாம்.

தலைமுடி உதிர்ந்த இடத்தில் முடி வளர எளிய இயற்கை வழிமுறைகள்
* சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும்.

* ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்துவிடவும். முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

* கூந்தல் வளர்ச்சிக்கு உடல் போஷாக்கு மிகமிக முக்கியம். விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட சத்தான ஆகாரங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.

* கறிவேப்பிலை உணவில் தாராளமாய் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைமுடி செழிப்பாய் வளரும்.

* செம்பருத்திப்பூவை கசக்கிச் சாறு எடுத்து முடி உதிர்ந்து சொட்டையாகியுள்ள இடத்தில் தேய்த்துவர முடி வளர ஆரம்பிக்கும்.

* தாமரை இலையை அரைத்துச் சாறெடுத்து நல்லெண்ணெய்யுடன் கலந்து தைலமாக காய்ச்சிக் கொள்ளவும். இதனை தலை சொட்டையான இடத்தில் தேய்த்துவர, அந்த இடத்தில் முடி கருகருவென வளர்ந்துவிடும்.

* மருதாணி இலையை தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துகொள்ளுங்கள். இதனை தினசரி தலைக்குத் தடவிவர செம்பட்டை மாறி முடி கருமையாகும்.

* வெந்தயத்தை தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்து தலையில் தேய்த்து, அரைமணிநேரம் வைத்திருந்து குளித்துவிடுங்கள். அடிக்கடி பயன்படுத்திவர, முடி வளரும், முடி கொட்டுதல் நீங்கும்.

* 1 ஸ்பூன் இஞ்சில்ச் சாற்றில் சிறிது தேன் கலந்து அதிகாலையில் சாப்பிட்டுவர, பித்த நரை, மற்றும் இளநரை மறையும்.

* பாதாம் எண்ணெயினால் தினசரி தலையில் வேர்க்காலில் (scalp) குறைந்தது 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவர முடி வளர்ச்சி அதிகமாகும்.

* பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் பால், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட ஏதுவாகும்.

* முடி நன்கு வளர முடி சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, இயற்கை முறை ஷாம்புகளையே (natural shampoo) உபயோகியுங்கள்.

* தலைமுடியை நெல்லிக்காய் பொடி அல்லது சிகைக்காய் கொண்டு மசாஜ் செய்து அலசிவாருங்கள். முடி வளர்ச்சி உண்டாகும்.

* அடிக்கடி ஆயில் மசாஜ், முடியின் வேர்க்காலுக்கு (scalp) செய்து வாருங்கள்.

* உடம்பில் மலச்சிக்கல் உண்டானால், உடல் உஷ்ணம் அதிகமாகி, உடம்பில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே மலசிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

* கொத்தமல்லி இலைச்சாற்றினைக் கொண்டு, தலைமுடியின் வேர்க்காலில் (scalp) மசாஜ் செய்துவர தலைமுடி கருமையாய் வளரும்.

* தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் மசாஜ் செய்துவர, முடி நன்கு வளரும்.201609060838353237 Simple natural methods to grow hair in place of fallen hair SECVPF

Related posts

கூந்தல் நீளமாக இல்லைன்னு வருத்தமா? இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் தேங்காய்ப்பால் சிகிச்சை

nathan

உங்க முடி பறவைக்கூடு மாதிரி அசிங்கமா இருக்கா?

nathan

உங்களுக்கு தெரியுமா தலைமுடி உதிர்வதை தடுக்கும் சின்ன வெங்காயம்…!!

nathan

முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமாக வைக்க உதவும் சில டிப்ஸ்…!சூப்பர் டிப்ஸ்

nathan

‘இந்த’ இரண்டு டீயில் உங்க தலைமுடியை அலசுனீங்கனா…முடி கருகருன்னு நீளமா வளருமாம் தெரியுமா?

nathan

அலுமினியத்தாளை தலையில் சுற்றிக் கொள்வதால் பெறும் நன்மை பற்றி தெரியுமா?

nathan

தலைக்கு குளிக்க நேரமில்லையா? உங்க தலை கப்பு அடிக்குதா? இதோ சில டிப்ஸ்…

nathan

உங்களுக்கு மொட்டை மண்டையில கூட கிடு கிடுனு முடி வளர வைக்கணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan