27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
yELHZRo
கண்கள் பராமரிப்பு

கண் கருவளையத்தை போக்கும் வெள்ளரி

நாகரீக வாழ்க்கையில் தூக்கத்தை தொலைப்பது, தைராய்டு சுரப்பியில் ஏற்படும் குறைபாடு, கல்லீரல் செயல்பாட்டில் உள்ள குறைபாடு, உப்பு அதிகமாக சாப்பிடுவது, வெயிலில் அதிகம் நேரம் இருப்பது, ரத்தசோகை, போன்றவற்றால் கண்ணில் கருவளையம் ஏற்படும். நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், கண் கருவளையத்தை போக்கும் மருத்துவத்தை காணலாம். வெள்ளரியை பயன்படுத்தி கண் கருவளையத்துக்கான மருந்து தயாரிக்கலாம். வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி பசையாக எடுத்துக் கொள்ளவும். இதை கண்களுக்கு மேல் பூசி சுமார் 10 நிமிடம் வைத்திருந்து கழுவுவதால் கருவளையம் மறையும்.

கண்கள் குளிர்ச்சி அடையும். ரத்த ஓட்டம் சீராகிறது. கருவளையத்தை போக்குவதில் வெள்ளரிக்காய் அற்புத மருந்தாகிறது. வெள்ளரியை அடிக்கடி சாப்பிடுவதால், சிறுநீர் பெருக்கியாகவும் விளங்குகிறது. மாதுளம் பழச்சாறு 48 நாட்கள் வரை குடித்துவர கண் கருவளையம் போகும். கண்கள் ஒளிபெறும். ரத்த சோகை சரியாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட மாதுளையில் விட்டமின் சி உள்ளது நோய் எதிர்ப்பு சக்தி உடையது. தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை கருவளையம் ஏற்பட காரணமாகிறது. எனவே, சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். குறைந்தது 6 மணி நேரமாவது நன்றாக தூங்க வேண்டும்.

கண் கருவளையத்துக்கு தக்காளி நல்ல மருந்தாகிறது. நோய் தடுக்கும் மருந்தாக விளங்குகிறது. தக்காளியில் வைட்டமின் சி சத்து உள்ளது. புண்களை ஆற்றக்கூடியது. வீக்கத்தை வற்ற செய்கிறது. தக்காளியை சாப்பிடுவது ஆரோக்கியமானது. தக்காளியை துண்டுகளாக்கி கண்களின் மீது வைத்திருந்தால் கண் எரிச்சல் சரியாகும். கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும். கருவளையம் சரியாகும். உருளைக்கிழங்கை பயன்படுத்தி கண் கருவளையத்துக்கான மருந்து தயாரிக்கலாம். உருளைக்கிழங்கை சுத்தப்படுத்தி சதைப் பகுதியை பசையாக அரைத்து எடுக்கவும். மெல்லிய துணியில் பசையை வைத்து கண்களுக்கு மேல் வைத்திருந்தால், அதன் சாறு கண்களின் மீது படும்.

சுமார் அரைமணி நேரம் வைத்திருக்கலாம். இதனால் கருமை நிறம் மாறும். தீக்காயங்களால் ஏற்படும் கருமைநிறத்தை உருளைக்கிழங்கு சாறு மாற்றும். உருளைக்கிழங்கு அற்புதமான மருத்துவ குணங்களை உடையது. வலியை குறைக்க கூடியது. நோய் நீக்கியாக பயன்தருகிறது. குளிர்ச்சி தரக்கூடியது. கண்கருவளையத்தை சரிசெய்கிறது. உப்பை குறைப்பது, வெயிலில் அதிக நேரம் செல்லாமல் இருப்பது, சத்தூட்டமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கருவளையம் வராமல் தடுக்கலாம். சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்றுவை சரிசெய்யும் மருத்துவத்தை பார்க்கலாம். சிறு நெறிஞ்சில் செடியை ஒரு கைபிடி அளவுக்கு எடுத்து நீரில் காய்ச்சி இனிப்பு சேர்த்து குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்று சரியாகும்.yELHZRo

Related posts

புருவ‌ங்களு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சி

nathan

கண்களுக்கு அடியில் சதைப்பை தொங்குகிறதா?

nathan

சென்ஸிட்டிவ் கண்களுக்கான மேக்கப் டிப்ஸ்!! | Tamil Beauty Tips

nathan

கருவளையத்தை நிரந்தரமாக நீக்க எளிய வழி- how to clear dark cycle?

nathan

கண் கருவளையங்களுக்கான சிறந்த‌ 11 அழகு குறிப்புகள்

nathan

கண்களுக்கு மேக்கப் போடுவது எப்படி?

nathan

கருவளையங்களைப் போக்க முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவது எப்படி?

nathan

கருவளையத்தை நீக்க

nathan

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு

nathan