இளமையையும், நிறத்தையும் அள்ளிக் கொடுக்கும் இந்த பப்பாளி பேஸ்ட் குளியல். பப்பாளி பழக்கூழ், மஞ்சள், வாழைப்பழக் கூழ், சந்தனப்பொடி, பயத்தமாவு பொடி… நான்கையும் ஒரே அளவு எடுத்து, சூடான நீரை ஊற்றி பேஸ்ட் ஆக்குங்கள்.
முகம் முதல் பாதம் வரை இதைப் பூசி, பத்து நிமிடம் ஊறவிட்டு, பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி குளியுங்கள். 10 நாளைக்கு ஒரு முறை இப்படி குளித்து வந்தால், இறந்த செல் புதுப்பிக்கப்பட்டு அழகும் இளமையும் அள்ளிப் போகும். முகத்தைப் பராமரிக்கும் அளவுக்கு பலரும் பாதத்தின் மீது கவனம் செலுத்துவதில்லை.
இதனால், ஒட்டுமொத்த உடம்பையும் தாங்கிப் பிடிக்கும் பாதத்தில் சுருக்கமும், கருமையும் படர்ந்து கரடு முராடகிவிடும். இதற்கு பப்பாளி தரும் டிப்ஸ் இதோ…
பப்பாளி கூழ் – 2 டீஸ்பூன்,
கஸ்தூரி மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
விளக்கெண்ணெய் – கால் டீஸ்பூன்
மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி, காய்ந்ததும் கழுவுங்கள். கருமையும் சுருக்கமும் காணாமல் போவதுடன் மெத்மெத்தென்ற பாதங்கள் கிடைக்கும்.
சிவந்த மேனியை விரும்புகிறவர்களுக்கான ஸ்பெஷல் பேக் இது..
உலர்ந்த திராட்சை – 10,
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் – 1
இவற்றை முந்தைய நாளே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் மிக்ஸ்யில் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பப்பாளி கூழ் – அரை டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதை முகத்துக்கு பேக் ஆகப் போட்டு 15 நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவி வர சிவப்பழகு க்ரீம் விளம்பரங்களில் வரும் பெண்கள் போன்ற மந்திர மாற்றத்துடன் ஜொலிப்பீர்கள்.