29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201608201144316981 spinach keerai kuli paniyaram SECVPF1
இனிப்பு வகைகள்

பாலக்கீரை குழிப்பணியாரம் செய்வது எப்படி

குழிப்பணியாரத்தில் கீரை, காய்கறிகளை போட்டு செய்தால் சுவையாக இருக்கும். இப்போது பாலக்கீரை போட்டு குழிப்பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பாலக்கீரை குழிப்பணியாரம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

இட்லிமாவு – ஒரு கப்
பாலக் கீரை – அரை கட்டு

தாளிக்க :

எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
முந்திரி – 6 (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
வெங்காயம் – ஒன்று
பச்சைமிளகாய் – இரண்டு
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

* பாலக்கீரையை பொடியாக நறுக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து முந்திரி போட்டு வறுத்த பின் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து பாலக்கீரை உப்பு சேர்த்து வதக்கி 5 நிமிடம் வேக வைத்த பின் தாளித்த கலவையை இட்லி மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றி, தீயின் தனலை சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.

* ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் விட்டு வேக விடவும்.

* சுவையான பாலக் குழிப்பணியாரம் ரெடி.

* கொத்தமல்லி துவையலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.201608201144316981 spinach keerai kuli paniyaram SECVPF

Related posts

தித்திப்பான ரசமலாய் செய்வது எப்படி

nathan

தீபாவளி ரெசிபி ஜாங்கிரி

nathan

உருளை குயிக் ஸ்பைசி காரப் பணியாரம்

nathan

சூப்பரான கண்டென்ஸ்டு மில்க் கஸ்டர்டு ரெசிபி

nathan

பேரீச்சை புடிங்

nathan

வேர்க்கடலை பர்ஃபி : செய்முறைகளுடன்…!

nathan

தீபாவளி ஸ்பெஷல் தித்திப்பான காஜு கட்லி

nathan

மைசூர்பாகு

nathan

முப்பால் கருப்பட்டி அல்வா

nathan