32.5 C
Chennai
Wednesday, Jun 26, 2024
06 1444132616 palak paneer
சைவம்

சிம்பிளான… பாலக் பன்னீர் ரெசிபி

உங்கள் குழந்தைகள் கீரை சாப்பிட அடம் பிடிக்கிறார்களா? அப்படியெனில் அவர்களுக்கு கீரையை வித்தியாசமான முறையில் சமைத்துக் கொடுங்கள். குறிப்பாக இரவில் சப்பாத்தி செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக பாலக் பன்னீர் செய்து கொடுங்கள்.

இது உங்கள் குழந்தை விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, அலுவலகம் முடிந்து களைப்புடன் வீட்டிற்கு வரும் உங்கள் துணைக்கும் நல்ல விருந்து கொடுத்தது போன்று இருக்கும். சரி, இப்போது அந்த பாலக் பன்னீரை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: பன்னீர் – 250 கிராம் எண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன் நறுக்கிய இஞ்சி, பூண்டு – 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) பசலைக் கீரை – 2 கட்டு வெந்தயக் கீரை – 1/2 கப் பச்சை மிளகாய் – 4-5 கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு சீரகம் – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் தயிர் – 3-4 டேபிள் ஸ்பூன் பிரஷ் க்ரீம் – 3-4 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் பசலைக்கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து 10 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து, அத்துடன் உப்பு, கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து அதில் தயிர், க்ரீம் சேர்த்து கிளறி, பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக பிரட்டி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பாலக் பன்னீர் ரெடி!!!

06 1444132616 palak paneer

Related posts

ஆந்திரா ஸ்பெஷல்: மட்டன் கீமா குழம்பு

nathan

புதினா பிரியாணி

nathan

சூப்பரான வெண்டைக்காய் ஸ்டஃப்டு வறுவல்

nathan

வரகு குடைமிளகாய் சாதம்

nathan

சத்தான முள்ளங்கி கீரை பொரியல்

nathan

காரசாரமான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி

nathan

30 வகை பிரியாணி

nathan

வெஜ் குருமா

nathan

கோதுமை ரவை புளியோதரை

nathan