31.8 C
Chennai
Wednesday, Jul 16, 2025
07 1444219442 babycorn masala
சைவம்

பேபி கார்ன் மசாலா

குழந்தைகளுக்கு பேபி கார்ன் என்றால் பிடிக்கும். எனவே இரவில் சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக பேபி கார்ன் மசாலா செய்து கொடுங்கள். இதனால் உங்கள் குழந்தை அதை விரும்பி சாப்பிடுவதோடு, குழந்தைக்கு அதில் உள்ள சத்துக்களும் கிடைக்கும்.

உங்களுக்கு பேபி கார்ன் மசாலா செய்யத் தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். இங்கு பேபி கார்ன் மசாலாவை எளிமையான முறையில் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: பேபி கார்ன் – 1 பாக்கெட் பிரஷ் க்ரீம் – 1 1/2 டேபிள் ஸ்பூன் பால் – 1/2 கப் பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) சீரகம் – 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது எண்ணெய் – 2 டீஸ்பூன் வெண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

வதக்கி அரைப்பதற்கு… பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) பூண்டு – 4 பற்கள் எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை: முதலில் பேபி கார்னை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிரேவி போன்று வந்ததும், தீயைக் குறைத்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் பேபி கார்னை நீருடன் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், பேபி கார்ன் மசாலா ரெடி!!!

07 1444219442 babycorn masala

Related posts

வெந்தயக்கீரை சாம்பார்

nathan

சிறுகிழங்கு பொரியல்

nathan

பரோட்டா!

nathan

சூப்பரான மாங்காய் புலாவ் செய்யலாம் வாங்க…

nathan

கத்தரிக்காய் வறுவல் – Brinjal / Eggplant Fry

nathan

ஆஹா பிரமாதம்! சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!

nathan

பீட்ரூட் – பச்சை பட்டாணி புலாவ்

nathan

வெஜிடேபிள் புலாவ்

nathan

ஓமம் குழம்பு

nathan