28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201608150904543990 women like diamond necklace SECVPF
ஃபேஷன்

இதயம் வருடும் இனிய வைர நெக்லஸ்கள்

இன்றைய நாளில் வைரங்கள் பல அணிகலன்களாக அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைகிறது.

இதயம் வருடும் இனிய வைர நெக்லஸ்கள்
வைரம் உலக மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் விலை உயர்ந்த நவரத்தின கற்களில் ஒன்று. எவ்வளவு அடி ஆழத்தில் தன்னை மறைத்துக் கொண்டு கரிய நிற பொருளாய் வெட்டி எடுக்கப்படும். வைரம், பட்டை தீட்ட தீட்ட தன் பளபளப்பையும், மதிப்பையும் அதிகரித்து கொள்கிறது.

ஆதி காலத்தில் இருந்தே வைரம் பல நாகரிக தொட்டிலின் ராஜ அலங்கார பொருளாய், அணிகலனாய் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. வைரங்கள் சிறியது முதல் பெரிய அளவு வரை கற்களாய் வெட்டி எடுக்கப்பட்டு பின் ரசாயன மேற்பூச்சுகளால் சுத்தம் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றது.

வைரங்களின் மதிப்பை அரிய உதவும் ‘4சி’களின் மதிப்புகளுக்கு ஏற்ப கரன்சி மதிப்பும் அதிகரிக்கவே செய்யும். தெளிவு, வண்ணம், ஒளி உமிழும் திறன் போன்றவைகள் எந்தளவுக்கு உள்ளதோ அந்த அளவிற்கு வைரத்தின் மதிப்பும் அதிகரிக்கும்.

இன்றைய நாளில் வைரங்கள் பல அணிகலன்களாக அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைகிறது. காரணம் வைரங்கள் அணிவதில் இருந்த தோஷம் என்ற தயக்கம் களையப்பட்டே வைரங்கள் விற்பனைக்கு வருகின்றன. இதன் காரணமாய் மக்கள் என்றென்றும் மதிப்பு உயர்ந்த வைர நகைகளை அழகிய டிசைனில் வாங்கி அணிகின்றனர்.

வனப்புடன் உருவாகும் வைர நகைகள் :

வைரத்தில் எண்ணற்ற வைர நகைகள் உருவாக்கி தரப்படுகிறது. மோதிரம், காதணி, நெக்லஸ், வளையல் போன்றவாறு பெண்கள் அணிகின்ற ஆபரணங்கள் அதிகளவு உற்பத்திச் செய்யப்படுகின்றன. ஆண்கள் அணிகின்றவாறு வைர மோதிரம், பிரெஸ்லெட், கடுக்கன், கோட் பட்டன்கள் போன்றவைகளும் உருவாக்கப்படுகின்றன. வைர நகைகள் முன்பு அதிகளவு தங்கத்தின் பின்னணியில்தான் ஜொலித்தன. இன்றைய நாளில் வெள்ளை உலோகமான பிளாட்டினம் விலை உயர்ந்தது. வைரமும் அதிக விலை மதிப்பிலானது. இரண்டு விலை மதிப்பில் உயர்ந்த பொருட்கள் இணைந்த நகைகள் மதிப்பில் உயர்ந்து விளங்குகின்றது.

டைமண்ட் வடிவ இடைவெளியுடன் உருவாகும் வைர நெக்லஸ்:

வைர நெக்லஸ்கள் விலை உயர்ந்தவை என்பதால் அதனை வடிவமைப்பதில் உலகளவில் பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் கூடுதல் பொறுப்புகள் வைர நெக்லஸ்களை வடிவமைக்கின்றன. வைர நெக்லஸ் அணிந்தாலே அனைவரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். அதன் சிறப்பான வடிவமைப்பு மேம்பட்டதாய் இருந்தால் அந்த வைர நெக்லஸ்-யை விட்டு கண் அகலாது.

புதிய வைர நெக்லஸ் கழுத்தில் ஓர் விலை பின்னலாய் தொங்கும் வகையில் டைமண்ட் வடிவில் உட்புறம் இடைவெளி விட்டு பிளாட்டின உலோகத்தில் வரிசையாய் வைரங்கள் பதியப்பட்டுள்ளன. டைமண்ட் வடிவின் கீழ் பகுதியில் வட்ட வடிவில் வளைந்த வைரத் தொங்கல்களுடன் அதற்கு கீழ் சிறு நீலநிற கற்கள் இடைவெளி விட்டு தொங்க விடப்பட்டுள்ளது. வடிவமைப்பில் உள்ள இந்த நெக்லஸ் சற்று அகல வரிசை நெக்லஸ் எனபதால் அதிக வைரம் பதியப்பட்டது. அதற்கு ஏற்ப அதன் விலையும் அதிகமானது.

இதய வடிவிலான வைர நெக்லஸ் :

கழுத்தை விட்டு சற்று இறங்கி தொங்கக்கூடிய வடிவிலான இந்த நெக்லஸ் அழகிய இதய வடிவிலானது. மேற்பகுதியில் அகலமாய் கிழிறங்கி வர வர குறுகியவாறு இருபக்கமும் நெருக்கமான வகையில் வைரங்கள் பதியப்பட்டுள்ளன. இதில் சோக்கர் நெக்லஸ் போன்று கழுத்தை இறுக்கி பிடிக்கும் வடிவமைப்பும் உள்ளது. இரு முனை இணையும் கீழ் பகுதியில் ஒற்றை வண்ண கல் தொங்கவிடப்பட்டுள்ளது.

இலை, கொடி வடிவமைப்புகள் கூடிய வைர பந்தல் நெக்லஸ்:

வளைந்த கொடி அமைப்பில் சிறு இலை வடிவம், பூக்கள் இணைந்து ஓர் வைர பந்தலாய் தோன்றும் அழகிய வைர நெக்லஸ். ஒவ்வொரு வளைவும் வைரகற்களின் கூட்டணியில் கூடுதல் பளபளப்புடன் திகழ்கின்றன. சிறியதும், பெரியதும் வைர கற்களின் கூட்டணியில் உருவான இந்த வைர நெக்லஸ் கழுத்தில் முக்கோண வடிவ அமைப்பில் உருவானது. இதன் கீழ் பகுதியில் வைர மொட்டுகள் இடைவெளி விட்டு உள்ளது போன்று தொங்க விடப்பட்டுள்ளது. 201608150904543990 women like diamond necklace SECVPF

Related posts

மெஹந்தி

nathan

பெண்கள் நளினமாகப் புடவை கட்ட ஆலோசனைகள் !

nathan

உங்கள் செல்ல குழந்தையை தேவதையாக காட்டும் நகை, உடை

nathan

தங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க இத படிங்க!

sangika

சிறுவர்களுக்கான கிறிஸ்மஸ் ஆடைகள்: baby boy christmas outfit

nathan

தங்க நகையை பற்றி தெரிந்து கொள்வோம்

nathan

பட்டு சேலை அறிய வேண்டிய விஷயங்கள்

nathan

கலர் கலராய் கவரும் காலணி

nathan

விருப்பம் போல் அணிய ஏற்ற விதவிதமான யுவதியர் பேண்ட்கள்

nathan