25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201608151025117128 How to make mutton sothi SECVPF
அசைவ வகைகள்

சுவையான மட்டன் சொதி செய்வது எப்படி

மட்டன் சொதி தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான மட்டன் சொதி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மட்டன் – 300 கிராம்
இஞ்சி விழுது – 30 கிராம்
பூண்டு விழுது – 30 கிராம்
பச்சை மிளகாய் – 6
தேங்காய்ப்பால் (இரண்டாம் முறை எடுத்தது) – 200 மில்லி
தேங்காய்ப்பால் (முதல் முறை எடுத்தது) – 100 மில்லி
மஞ்சள்தூள் – 5 கிராம்
எலுமிச்சைப்பழம் – 1
கறிவேப்பிலை – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவைக்கு
பட்டை – 10 கிராம்
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்

* எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மட்டன், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு, இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். பிறகு வெளியில் எடுக்கவும்.

* ஆட்டுக்கறி சமநிலைக்கு வந்ததும், குக்கரில் போட்டு 6 விசில் போட்டு இறக்கி ஆற விடவும்.

* கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, இதில் கறிவேப்பிலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு பச்சை மணம் போகும் வரை வதக்கவும்.

* பின்னர் குக்கரில் வேக வைத்த மட்டனை இதில் சேர்க்கவும்.

* இப்பொழுது முதல்முறை எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, உப்பை சரி செய்யவும்.

* லேசாகக் கொதி வந்தவுடன் இறக்கி சூடாகப் பரிமாறவும். (அதிக நேரம் கொதிக்க வைத்தால், திரிந்து விடும்).

* சுவையான மட்டன் சொதி ரெடி. அதை இடியாப்பம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.
201608151025117128 How to make mutton sothi SECVPF

Related posts

சைடிஷ் பட்டர் சிக்கன் கிரேவி

nathan

சூப்பரான மட்டன் கீமா புலாவ்

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி

nathan

(முட்டை) பிரியாணி

nathan

சிக்கன் கிரேவி / Chicken Gravy

nathan

சன்டே ஸ்பெஷல்: சிக்கன் குழம்பு

nathan

ஃபிங்கர் சிக்கன் (finger chicken)

nathan

வீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்யலாம் வாங்க!

nathan

சுவையான இறால் கிரேவி

nathan