23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
hair
ஹேர் கலரிங்

‘ஹேர் கலரிங்’கில் எத்தனை வகை?

ஹேர் கலரிங்’ என்பது, பேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக இன்று உருவாகி விட்டது. சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பதற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர் கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோற்றத்தை வேகமாக மாற்றுவதற்கான சிறந்த வழி ஹேர் கலரிங். தற்போது ஹேர் கலரிங், பலதரப்பட்ட கூந்தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண்ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கின்றன.

“ஹேர் கலரிங்’ வகைகள்:
ஹேர் கலரிங் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வண்ணங்கள், திரவம், பவுடர், ஆயில் கிரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்பட பல வகைகளில் கிடைக்கிறது. நிரந்தர ஹேர் கலரிங் செய்வதற்காக ஜெல் மற்றும் பிற பொருட்கள் ஆகியவையும், தற்காலிக மற்றும் குறிப்பிட்ட காலம் நிரந்தரமாக இருக்கும் செமி-பெர்மனன்ட் கலரிங் செய்வதற்காக, மஸ்காரா, கிரேயான்ஸ் மற்றும் வண்ண கூந்தல் ஸ்பிரேக்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

கூந்தலின் நீளத்தை பொறுத்து, அதற்கு ஹேர் கலரிங் செய்வதற்கான செலவும் ஏற்படும். குட்டையான மற்றும் நடுத்தர அளவிலான கூந்தல் வகைகளுக்கு, “ஹேர் கலரிங்’ செய்தால், மிக அழகாக தோற்றமளிக்கும். “ஹேர் கலரிங்’ செய்பவர்கள், நிரந்தமாக செய்து கொள்வதா அல்லது தற்காலிகமாக செய்து கொள்வதா என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

நரை முடியை மறைப்பதற்காக ஹேர் கலரிங் செய்ய விரும்புபவர்கள், நிரந்தமான ஹேர் கலரிங் முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், ஒட்டுமொத்த கூந்தலையும் ஹேர் கலரிங் செய்து கொள்ளுவதா அல்லது ஹைலைட் மட்டும் செய்து கொள்ளுவதா என்பதையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

ஹேர் கலரிங் முறைகள்:

ஹைலைட்டிங், ஸ்ட்ரீக்கிங், பிராஸ்டிங், பிங்கர் பெயின்டிங் ஆகியவை ஹேர் கலரிங் செய்யப்படும் பல்வேறு முறைகள். ஆனால், இன்றைய நவீன இளைஞர்கள் பொதுவாக, ஹை லைட்டிங் மற்றும் ஸ்ட்ரீக் கிங் ஆகியவற்றையே விரும்புகின்றனர். கூந்தல் பல பாகங்களாக பிரிக் கப்பட்டு வண்ணங்கள் பூசப்படுவதற்கு “ஹைலைட்டிங்’ என்று பெயர். பிரவுன் மற்றும் கோல்டன் நிறங்கள், மாநிற சருமத்தினருக்கும் சிவப்பு நிறம், நல்ல வெண்மையான சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும் என, நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஹேர் கலரிங் கூந்தலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், காப்பர் அல்லது சிவப்பு நிற கலரிங் செய்வதை முடிந்த வரை தவிர்க்கலாம். ஏனென் றால், இவை விரைவில், வெளிறிவிடும் தன்மை கொண்டது. ஹேர் கலரிங் செய்த பின், அதற்கென தகுந்த ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களையே பயன்படுத்த வேண்டும்.

ஹேர் கலரிங் செய்த பின், எவ்வாறு கூந்தலை பராமரிப்பது என்பதற்கு, கூந்தல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று செயல்படலாம். ஹேர் கலரிங் செய்வதற்கு, பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் நல்ல தரமானது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது நல்லது. நிரந்தரமான, வளமான தலைமுடி வேண்டும் என விரும்புவோர், “ஹேர் கலரிங்’ ஆசைக்கெல்லாம் அடிபணியக் கூடாது. hair

Related posts

ஹேர் கலரிங் செய்யப் போறீங்களா?

nathan

உங்கள் முடி வெள்ளையாக மாறுவதற்கு இதுதான் காரணம் !!

nathan

வெள்ளை முடி அதிகரிக்கிறதா? இந்த இயற்கையான ஹேர் டைகள் ட்ரை பண்ணுங்க!

nathan

ஹேர் கலரின் வண்ணத்தை தரும் பிபிடியின் அளவு சற்று அதிகமானால் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது

nathan

இயற்கை சாயம் செய்ய உதவும் சில செய்முறைகள்…

sangika

பச்சை மருதாணியை தலையில் போடலாமா?

nathan

நரை முடியை மறைக்கும் ஹேர் பேக்குகள் !!

nathan

இயற்கையான ஹேர் டை

nathan

நரைமுடியை கருப்பாக மாற்றும் அற்புத மூலிகை கற்பூர வல்லி! சூப்பர் டிப்ஸ்!

nathan