25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201608120751558395 Lipstick women beauty SECVPF
உதடு பராமரிப்பு

லிப்ஸ்டிக் இதுவரை தெரியாத ஆச்சர்யங்கள்

பெண்கள் உபயோகிக்கும் எண்ணற்ற அழகு சாதனப்பொருட்களில் தனித்துவமானது லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச்சாயம்.

லிப்ஸ்டிக் இதுவரை தெரியாத ஆச்சர்யங்கள்
பெண்கள் உபயோகிக்கும் எண்ணற்ற அழகு சாதனப்பொருட்களில் தனித்துவமானது லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச்சாயம். பெண்களின் முக அழகை வர்ணிக்கும் கவிஞர்கள் எவரும் குறிப்பிடுவது கண்களும் உதடுகளும்தான். உதட்டை அழகுப்படுத்துவதில் லிப்ஸ்டிக்குகளுக்கு தனி இடம் உண்டு. இதன் மூலமே உதட்டின் வடிவம் நன்கு எடுத்து காட்டப்படுகிறது.

மேலும் விசேஷங்களுக்கு செல்லும்போது அணிந்திருக்கும் உடைகளுக்கு ஏற்ப பல வகை நிறங்களுடன் லிப்ஸ்டிக் கிடைப்பதால் ஒவ்வொரு உடைக்கு ஏற்றபடி பொருத்தமாக லிப்ஸ்டிக் பயன்படுத்துவது ஒரு ஃபாஷன். சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவிற்கு வந்திருந்த முன்னால் உலக அழகி ஐஸ்வர்யா ராய் வயலட் கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தியிருந்தார். அது பலரது கவனத்தையும் கவர்ந்தது.

லிப்ஸ்டிக்குகள் தயாரிக்கும் நிறுவனங்களில் சில முன்னணி நிறுவனங்களையும் அவை தயாரிக்கும் விதவிதமான லிப்ஸ்டிக்குகள் பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம். லாக்மி இது எல்லோருக்கும் நன்கு பரிட்சயமான பெயர்தான். கண்மை தயாரிப்பில் பெயர்பெற்ற இந்த நிறுவனத்தின் பெயர் மக்கள் மனத்தில் நீங்காத இடம் பெற்ற பெயர் என்று சொல்லலாம். லாக்மியில் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற பல ரக லிப்ஸ்டிக்குகள் கைக்கு அடக்கமான விலையிலிருந்து, காஸ்ட்லி விலை வரை கிடைக்கிறது.

அடுத்த அழகு நிலையங்களுக்கும், அழகு சாதன கடைகளுக்கு அதிகமாக செல்வோராக இருந்தால் அவர்களுக்கு நன்கு தெரிந்த பெயர், லோ ரியல் பாரீஸ், இந்தியாவில் கிடைக்கும் சிறப்பான பிராண்டுகளில் ஒன்று லோ ரீயல் பாரீஸ், இருப்பினும் லிப்ஸ் டிக்கை பொருத்தவரை இவர்களிடம் இரண்டு வகை மட்டுமே கிடைக்கிறது. ஆனாலும் இவை தரமானவையாகவும், பெண்கள் அதிகம் விரும்பும் வகையிலும் இருப்பது சிறப்பு. கலர் பார் – இந்த கம்பனியின் சிறப்பே கல்லூரி மாணவிகளின் ஃபேவரேட்

ப்ராண்டாக இருப்பதுதான். காரணம் இதன் குறைந்த விலை, மற்றும் கைக்கு அடக்கமான வடிவம். மேட் லிப்ஸ்டிக்கை விரும்பும் பெண்கள் பெரும்பாலும் கலர் பாரையே விரும்பி வாங்குவார்கள். அடுத்து, எம்.ஏ.சி. இந்தியர்களுக்கு ஏற்றதுபோல் எல்லாவிதமான சரும நிறத்திற்கும் தனித்தனியாக லிஸ்ப்டிக்கைகொண்டுள்ளது இந்நிறுவனத்தின் சிறப்பம்சமாகும். இந்நிறுனத்தின் லிப்ஸ்டிக்குகள் ஒன்லைன் ஷாப்பிங்கில் வாங்க எளிதாக கிடைப்பது மற்றொரு சிறப்பு.

அடுத்து என்.ஒய்.எக்ஸ் ப்ராண்ட் லிப்ஸ்டிக்குகள், இந்த கம்பனி லிஸ்டிக்குகள் சிறப்பாக இருப்பினும், கிடைப்பது அறிதாக இருக்கிறது. இளம்பெண்கள் மஸ்காரா, மற்றும் ஐ லைனர்கள் பெரும்பாலும் “மே பி லைன் நிறுவனத்தினதாகவே இருக்கும் அந்த அலவிற்கு இந்த ப்ராண்ட் இளம் பெண்களின் மத்தியில் புகழ் பெற்றது. இந்நிறுவனத்தின் லிப்ஸ்டிக்குகள் விதவிதமான வகைகளில் கிடைப்பதுடன் எளிதாக வாங்கக்கூடிய விலையிலும், கவர்ச்சிகரமான அளவுகளில் இருப்பது கூடுதல் சிறப்பு.

இதுதவிர புதுமையான லிப்ஸ்டிக் ஒன்றை கொண்டுவந்துள்ளது, வோக் நிறுவனம். பார்ப்பதற்கே புதுமையாக இருக்கும் இதன் வடிவமைப்பே சிறப்பானது, கண்ணாடிப்போல் இருக்கும் இதன் முனையில் உள்ளே பூ இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலே தங்கத்துகள்கள் மின்ன ஒரு ஜல் கொண்டு மூடியிருக்கும். இதன் மேல்புறம் தங்க நிறத்தாள் வடிவமைக்கப்படிருப்பதால் பார்ப்பதற்கு என்னவோ ஒரு தங்க பேனாவின் முனையில் கண்ணாடி நிப் வைத்ததுபோல் இருக்கும்.

உடலின் தப்ப வெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் இதன் நிறம் மாறும். பார்ப்பதற்கே அழாகவும் புதுமையான முறையில் இருக்கும் இந்த வோக் லிப்ஸ்டிக்கின் விலை வெளிநாட்டு மதிப்பில் முப்பது டாலர், அதாவது சுமார் 2500 ரூபாய்தான்.

ஆனால் ஆடை அலங்கார ப்ரியர்கள் நிச்சயம் இதை தவரவிடமாட்டார்கள் என்பது உறுதி. 201608120751558395 Lipstick women beauty SECVPF

Related posts

உதட்டு வறட்சியை போக்கும் தேங்காய் எண்ணெய்

nathan

dark lips Natural Cure..உதடு கருப்பாக உள்ளதா?

nathan

இந்த 3 வகையான லிப் பாம் தான் உங்கள் உதட்டை பாழாக்கும்!!

nathan

அழகான உதடுகளுக்கு…!

nathan

உங்களுக்கு லிப்ஸ்டிக் எப்படி போடணும் என தெரியுமா?

nathan

உதடு வெடிப்பை நீக்கும் குறிப்புகள்

nathan

உதட்டை சுற்றிலும் உண்டாகும் கருமையை போக்கும் குறிப்புகள்

nathan

உதடுகளில் ஏற்படும் கருமையை எப்படி போக்குவது?

nathan

கோடையில் உதடு, வறண்ட சருமத்திற்கான அழகு குறிப்பு

nathan