27 C
Chennai
Thursday, Nov 14, 2024
5 24 1464069636
சரும பராமரிப்பு

சரும சுருக்கங்களுக்கு குட் பை சொல்ல இந்த டிப்ஸ்களை பயன்படுத்துங்க

யாருக்குதான் சுருக்கங்கள் கூடிய முகம் பிடிக்கும். வயதானாலும் சுருக்கங்கள் வருவது விரும்ப மாட்டோம். முதுமை அடையாமல் யாரும் இருக்க முடியாது என்பது உண்மைதான்.

ஆனால் வயதான தோற்றத்தை தள்ளிப் போடலாம் அல்லவா? உங்கள் இளமையை நீட்டிக்கச் செய்ய னீங்கள் செய்ய வேண்டியது போதிய பராமரிப்பு மட்டுமே.

கடைகளில் விற்கும் தரம் வாய்ந்த க்ரீம்கள் உங்கள் சருமத்தில் உல்ல சுருக்கங்களை போகச் செய்யும் என்பது ஒத்துக் கொள்ள வேண்டியது என்றாலும், இயற்கையை அடிச்சுக்க முடியாது என்ற உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கான எளிய இயற்கையான குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

பால் மற்றும் தேன் கிளின்ஸர் :

தேன் – 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் -அரை டேபிள் ஸ்பூன்

செய்முறை : பால் மற்றும் தேன், இரண்டையும் கலந்து முகத்தில் போடுங்கள். 10 நிமிடம் கழித்து, முகத்தை கழுவவும். தேன் சருமத்தில் உள்ள நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கச் செய்யும், சுருக்கங்களைப் போக்கும். பால் இயற்கையாக கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. பாலிலுள்ள லேக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள அழுக்குகளையும் இறந்த செல்களையும் வெளியகற்றுகிறது.

எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை :
சர்க்கரை- 1 டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு-2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

சர்க்கரை கரையும் வரை எலுமிச்சை சாற்றில் கலந்து பின் முகத்தில் போடவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். சர்க்கரையில் உள்ள கிளைகோலிக் அமிலம் பாதிப்படைந்த சருமத்தை சரி செய்கிறது. எலுமிச்சையில் உள்ள விட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

முட்டையின் வெள்ளைக் கரு மாஸ்க் :

இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக நுரை வரும் வரை அவற்றை அடித்துக் கொள்ளுங்கள். பின் அதனை முகத்தில் போடவும். சுருக்கங்கள் அதிகம் உள்ள பகுத்திகளின் சற்று கூடுதலாக போடவும்.

நன்றாக முகம் இறுகும் வரை காய விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவுங்கள். வெள்ளைக் கரு முழுவதும் ப்ரொட்டினினால் ஆனது. கொலாஜனை அதிகரிக்கச் செய்யும். மேலும் தொய்வடைந்த சருமத்தை இறுக்கி, சருமத்திற்கு போஷாக்கு அளிக்கும்.

லெமன் பாம் :

லெமன் பாம் புதினா வகை சார்ந்த ஒரு செடி(horse mint). அதனை ஒரு கைப்பிடி எடுத்து, 2 கப் சுடு நீரில் போடுங்கள். அந்த நீர் குளிர்ந்தவுடன், அதனைக் கொண்டு முகம் கழுவினால் அருமையான ரிசல்ட் கிடைக்கும். சுருக்கத்தை போக்கி, சருமத்திற்கு இறுக்கம் தரும்.

எலுமிச்சை சாறு மற்றும் பியர் டோனர் :

எலுமிச்சை -1 பியர்-அரை கிளாஸ் ரோஸ் வாட்டர் -அரை கிளாஸ்

செய்முறை : இந்த மூன்றையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பின் ஒரு பஞ்சினால் இந்த கலவையை நனைத்து, முகத்தில் நன்றாக தேயுங்கள். இது மிகச் சிறந்த டோனராக செயல்படுகிறது.

சருமத்தில் அழகையும் பொலிவையும் தரும். சுருக்கங்கள் நீங்கி விடும். இன்னும் பெஸ்ட் ரிசல்ட் தர, இரவு தூங்கும் முன் இதனை முகத்தில் பூசி விட்டு பின், அடுத்த நாள் காலையில் முகத்தை கழுவலாம்.

மேலே சொன்ன அனைத்து டிப்ஸ்களுமே சருமத்தில் சீக்கிரம் சுருக்கங்களை போக்கும். சருமத்தில் எந்த வித பாதிப்பையும் தராது.

இவற்றோடு, உணவிலும் நல்ல காய்கறிகள், ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை உண்ணும் போது இழந்த இளமையை திரும்ப பெறலாம் என்பதில் சந்தேகமேயில்லை.5 24 1464069636

Related posts

இப்படி தொடர்ந்துதினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்

nathan

சில‌ பெண்களின் மார்பகங்கள், தொடைகளில் கோடுகள் உருவாவது ஏன்?

nathan

குளிப்பதற்கு சோப்பும் ஷாம்புவும் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா?

nathan

கருமையான சருமத்தை வெண்மையாக்க சில அட்டகாசமான வழிகள்!!!

nathan

இயற்கை முறையில் பேஷியல் செய்தால் நல்ல பயன்கள் உண்டு..!

nathan

வெள்ளையாக்க நைட் டைம்-ல இத போடுங்க… கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! கவர்ச்சியான தோற்றத்திற்கு சில எளிய வழிகள்!!!

nathan

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போக காரணம் என்ன?

nathan

சரும பராமரிப்பில் விளக்கெண்ணை

nathan