30.5 C
Chennai
Friday, Jun 27, 2025
201608040836128054 homemade lotion prevent dryness during winter SECVPF
சரும பராமரிப்பு

குளிர்காலத்தின் வறட்சியை போக்கும் ஜெல்

உங்கள் சருமம் குளிர்காலத்தில்தான் அதிகம் பாதிக்கப்படும். இதனை தவிர்க்க வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஜெல்லை உபயோகப்படுத்தலாம்.

குளிர்காலத்தின் வறட்சியை போக்கும் ஜெல்
நல்ல ஆரோக்கியமான உடல் உள்ளுறுப்புகள் வயதை தீர்மானிக்கின்றன. உள்ளுறுப்புகளின் இளமை உங்கள் சருமத்தில்தான் பிரதிபலிக்கும். நல்ல ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதைப் போல், எந்தவித கெமிக்கல்கள் இல்லாத அழகு சாதனங்களை பயன்படுத்தினால் சருமம் பாதிப்படையாமலே இருக்கும்.

உங்கள் சருமம் குளிர்காலத்தில்தான் அதிகம் பாதிக்கப்படும். ஈரப்பசை குறைந்து, வறட்சி ஏற்படும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்கும். இதனை தவிர்க்க வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஜெல்லை உபயோகப்படுத்தலாம். இந்த ஜெல்லை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சோற்றுக் கற்றாழை – கால் கப்
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
லாவெண்டர் எண்ணெய் – 2 துளிகள்
புதினா எண்ணெய் – 2 துளிகள்

சோற்றுகற்றாழையின் சதைபகுதியை எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இதில் தேங்காய் எண்ணெய், புதினா மற்றும் லாவெண்டர் எண்ணெய்களை கலந்து ஒரு பாட்டிலில் சேகரித்து காற்று பூகாதவாறு மூடி நன்றாக குலுக்கிக் கொள்ளுங்கள். இதனால் ஒன்றோடு ஒன்று கலந்துவிடும்.

இதனை குளித்தவுடன் தினமும் போட்டுக் கொள்ளுங்கள். அற்புதமான மாய்ரைஸராக செயல்படும். சுருக்கங்களை போக்கிவிடும். முகப்பரு, கரும்புள்ளி ஆகியவற்றை தடுக்கும். 201608040836128054 homemade lotion prevent dryness during winter SECVPF

Related posts

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடும்!…

sangika

சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுத்த சூப்பர் டிப்ஸ்…

nathan

கரும்புள்ளிகளை எளிதில் நீக்குவதற்கான அற்புத வழிகள்!

nathan

சருமமே சகலமும்…!

nathan

கருவளையும், கழுத்தும் கருமையும் இருந்த இடம் காணாமல் போக

nathan

பளபள தோலுக்கு பாதாம்

nathan

வீட்டிலேயே புத்துணர்ச்சி தரும் ஸ்பா வேண்டுமா? இதோ இயற்கையான மூலிகை குளியல்

nathan

இத படிச்சா.. இனிமேல் வாழைப்பழ தோலை தூக்கி போடவே மாட்டீங்க…

nathan

வெள்ளையாக மாற பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம்களால் ஏற்படும் பக்க விளைவுகள்

nathan