25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201607290718414075 natural ways to control Dryness of hair SECVPF
தலைமுடி சிகிச்சை

கூந்தலின் வறட்சி போக்கி, பளபளப்பாக்க இயற்கை வழிகள்

எண்ணெய் தேய்த்து, சரிவரப் பராமரிக்காதவர்களின் தலை முடியானது, வறண்ட பாலைவனமாக மாறி ஒட்டுமொத்த முடி வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

கூந்தலின் வறட்சி போக்கி, பளபளப்பாக்க இயற்கை வழிகள்
எண்ணெய் தேய்த்து, சரிவரப் பராமரிக்காதவர்களின் தலை முடியானது, வறண்ட பாலைவனமாக மாறி, நுனி முடியில் பிளவு ஏற்படும். இதனால், ஒட்டுமொத்த முடி வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

* 10 கிராம் கடுக்காய், மிளகு 10 கிராம் இரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடித்து, கால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் போட்டுக் கலக்குங்கள். இந்த எண்ணெயைத் தினமும் தடவி சூடான தண்ணீரில் டவலை நனைத்து ஒத்தடம் கொடுங்கள். மிதமான சூட்டில் மசாஜ் செய்யலாம். பிறகு சீப்பால் வாரி பின்னல் போட்டுக் கொள்ளலாம். நுனிப் பிளவு நீங்கி, முடி நன்றாகப் பளபளக்கும். நீளமாக வளரத் தொடங்கும்.

* 100 கிராம் கிர்ணி விதையுடன் பயத்தம் மாவு, சீயக்காய் கால் கிலோ சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால், தலையில் அழுக்கு நீங்கி சுத்தமாகப் பளபளவென இருக்கும்.

* தலா 4 துளி ஆலிவ் ஆயில், 4 துளி விளக்கெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, சீப்பால் தினமும் தலை முடியை வாரவும். வறட்சியான முடியும் பளபளக்கும்.

* ஒரு கப் தேங்காய் பாலில், 4 டீஸ்பூன் கடலை மாவு கலந்து தேய்த்து தலைக்குக் குளித்துவந்தால், முடி பளபளப்பாக இருக்கும்.

* 100 மிலி தேங்காய் எண்ணெயை அடுப்பில்வைத்துக் காய்ச்சி, அதில் 50 கிராம் ஃப்ரெஷ் செம்பருத்தி பூவைப் போட்டு வைத்துவிடுங்கள். இந்த எண்ணெயைத் தினமும் தலைக்குத் தேய்த்துக் கொள்ளலாம்.

* மரிக்கொழுந்து, வெட்டிவேர் தலா 50 கிராம் எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு ஃப்ளோரல் ஆயில் என்று பெயர். தலைமுடி பளபளப்பதுடன் பூக்களால் கூந்தல் வாசனையாகவும் இருக்கும். 201607290718414075 natural ways to control Dryness of hair SECVPF

Related posts

தலை முடியின் பராமரிப்புகள்

nathan

Tips.. நரைமுடி வருவதற்கான சரியான காரணம் என்ன? அவை ஏற்படுவதற்கு முன் தடுக்க முடியுமா?

nathan

இஞ்சியை தலைமுடிக்கு தடவியவுடன் ஒரே நாளில் உங்களுக்கு முடிவு தெரியாது என்பதால் தொடர்ந்து பயன்படுத்துவ…

nathan

உங்களுக்கு மொட்டை மண்டையில கூட கிடு கிடுனு முடி வளர வைக்கணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலைமுடி எலி வால் போல அசிங்கமா இருக்கின்றதா? அப்ப இந்த எண்ணெயை தினமும் யூஸ் பண்ணுங்க…

nathan

முயன்று பாருங்கள் கருமையான தலைமுடி பெற கருப்பு மிளகு பயன்படுத்துங்கள்…

nathan

ஆயில் மசாஜ் செய்தால்தான் முடி வளருமா?

nathan

முடி ரொம்ப வறண்டு இருக்கா… அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்க க்ரீன் டீயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

nathan